Breaking News

சிங்கள பேரினவாதத்தின் கிழியும் முகமூடிகள் - வீரகேசரி


புத்த பெருமான் கீழே அமர்ந்­தி­ருந்து தன்­னு­டைய
முதன்மை சீடர்­க­ளுக்கு ‘தர்மம்’ குறித்து போதித்த இந்­தி­யாவின் சாரநாத் புத்­த­ம­டத்தில் ஓங்கி வளர்ந்­தி­ருந்த போதி­ம­ரத்தின் ஒரு பகுதி தானாவே முறிந்து விழுந்­தி­ருக்­கின்­றது.

அழுத்­க­ம­விலும் அதனை அண்­டிய பிர­தே­சங்­க­ளிலும் இன­வா­தத்தின் நர­வேட்டை உச்­ச­நி­லையை அடைந்து 96 மணித்­தி­யா­லங்­ளுக்குள் இது நிகழ்ந்­தி­ருக்­கின்­றது.

இலங்­கை­யு­ட­னான பௌத்த சமய உற­வுடன் மிகவும் நெருங்­கிய தொடர்­பு­பட்­டது என்று நம்­பப்­ப­டு­கின்ற சாரநாத் போதி­ம­ரத்தின் கிளை முறிந்து விழுந்­தமை வெறும் செய்தி மட்­டு­மாக இருக்­கலாம். 

அல்­லது ‘பூனை குறுக்­காகச் சென்றால் கெட்­டது நடக்கும்’ என்று நம்­பு­கின்ற ஒரு சமு­தாயப் பின்­பு­லத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு இதனை நோக்­கினால், போதி மரத்தின் கிளை முறிந்து விழுந்­தமை ஏதோ­வொரு ‘சகு­ணத்தை’ வெளிப்­ப­டுத்­து­வ­தா­கவும் இருக்­கலாம். 

சிங்­கள மக்கள் வழி­ப­டு­வது மட்­டு­மன்றி ஏனைய இன மக்­க­ளாலும் மதிக்­கப்­ப­டு­கின்ற கௌதம புத்தர் இதன்­மூலம் சிங்­கள மக்­க­ளுக்கு குறிப்­பாக இலங்­கையில் வாழும் அடிப்­ப­டை­வாத சிங்­க­ள­வர்­க­ளுக்கு மறை­முக சேதி ஒன்றை சொல்ல நினைத்­தி­ருக்­கலாம் என்று எண்­ணு­வ­தற்கு நிறை­யவே இட­முள்­ளது.

“தன்­னலம் துன்­பங்­க­ளுக்கு கார­ண­மாக அமை­கின்­றது. ஆசையை ஒழித்­தாலே மன­நிம்­மதி பிறக்கும்” என்று இவ்­வு­ல­குக்கு எடுத்­துக்­கூறி உயிர்கள் மீது காருண்யம், அன்பு செலுத்­து­மாறு வழி­காட்­டி­யவர் புத்தர். ஆனால், அந்த மதத்தை பின்­பற்­று­வ­தாக கூறிக் கொள்­வோரும் துற­வி­க­ளாக தம்மை முன்­னி­லைப்­ப­டுத்­து­வோரும் தாம் பரிந்­து­ரைத்த அடிப்­படைத் தத்­து­வங்­களை மீறி­யுள்­ளதன் வலியை ‘போதி­மர கிளையின் முறி­வினால்’ புத்தர் தம் சமூ­கத்­திற்கு வெளிப்­ப­டுத்­தி­யி­ருந்­தாலும் ஆச்­ச­ரி­யப்­ப­டு­வ­தற்கு இல்லை.

ஆக, கௌதம புத்­தரை தமது கடவுள் என்றும் போதி­ம­ரத்தை புனி­த­மா­னது என்றும் நம்­பு­வது உண்­மை­யென்றால், இந்த முக்­கி­யத்­து­வ­மிக்க போதி­மரக் கிளையின் முறிவு குறித்தும் சிந்­திக்க சிங்­கள கடும்­போக்­கா­ளர்கள் கட­மைப்­பட்­டுள்­ளார்கள்.

தொடரும் அச்சம் 

பேரு­வளை, அளுத்­கம, தர்­கா­நகர் பகு­தி­களில் புய­ல­டித்து ஓய்ந்­த­மா­திரி இருக்­கின்­றது. ஒரு புய­லுக்குப் பின்னர் ஊருக்குள் வரு­கின்ற மக்­களைப் போல மிகுந்த அச்­சத்­து­டனும் திகி­லு­டனும் இப்­பி­ர­தேச முஸ்­லிம்கள் தமது வீடு­க­ளுக்கு திரும்பிக் கொண்­டி­ருக்­கின்­றனர். வீடு­களே எரிக்­கப்­பட்­டு­விட்ட மக்கள் இன்னும் உற­வினர் வீடு­களே தஞ்­ச­மென கிடக்­கின்­றனர்.

ஆனால் - இன­வாத காடை­யர்கள் தம்மை நோக்கி கத்­தி­க­ளோடும்; பொல்­லு­க­ளோடும் ஓடி­வந்த போது, தமது கழுத்தில் ஆயு­தங்கள் வைக்­கப்­பட்­ட­போது, வீடும் கடை­களும் தீக்­கி­ரை­யாக்­கப்­பட்ட போது, துரத்தித் துரத்தி வெட்­டப்­பட்ட போது, உயிரை கையில் எடுத்துக் கொண்டு ஓடி­ய­போது…………. அம்­மக்­களின் மனதில் ஏற்­பட்ட அச்­சமும் பீதியும், உத­றலும் இன்னும் அடங்­க­வில்லை. 

அளுத்­கம கல­வ­ரத்தால் ஏற்­பட்ட சொத்து இழப்­புக்­களை காலம் திரும்பக் கொடுத்­து­விடும். அவர்­க­ளது வீடு­களும் கடை­களும் மெல்ல மெல்ல பழைய நிலைக்கு திரும்­பலாம். ஆனால் - இந்த நாட்டின் இன­வாத சக்­தி­களும் அவர்­களின் கைக்­கூ­லி­களும் முஸ்லிம் மக்­களின் மனதில் ஏற்­ப­டுத்­திய வடுக்கள் ஒரு­நாளும் ஆறப்­போ­வ­தில்லை.

காடை­யர்­களும் குண்­டர்­களும் முஸ்­லிம்கள் மீது தாக்­கு­தலை மேற்­கொண்டு ஓயும் வரைக்கும் சட்டம் தன் கட­மையைச் செய்­வ­தற்­கான உத்­த­ர­வுக்­காக காத்­தி­ருந்­தது போலவே தென்­பட்­டது. முப்­ப­டை­க­ளையும் தம்­வசம் வைத்­தி­ருந்த புலி­களை அழித்­தொ­ழித்த அர­சாங்­கத்­தாலும் பாது­காப்பு தரப்­பி­ன­ராலும், ஊர­டங்குச் சட்டம் ஒன்றின் துணை­யின்றி அளுத்­கம கல­வரச் சூழலை கட்­டுப்­பாட்­டுக்குள் கொண்டு வர முடி­யாமல் போனதை என்­ன­வென்று சொல் வது.

சிறு­பான்மை மக்­களை வம்­புக்­கி­ழுக்கும் கைங்­க­ரி­யத்தை இன­வா­திகள் நீண்­ட­கா­ல­மா­கவே செய்து வரு­கின்­றனர். யுத்­தத்­திற்குப் பிறகு முஸ்­லிம்கள் மீது தமது கவ­னத்தை குவித்­துள்ள இச் சக்­திகள் அவர்­களை சீண்டும் வேலை­களை அங்­கொன்றும் இங்­கொன்­று­மாக மேற்­கொண்டு வந்­தனர். ஹலால் ஒழிப்பு, அபாயா எதிர்ப்பு போன்­றன எல்லாம் இதன் மாற்று வடி­வங்­களே.

இவ்­வாறு முஸ்­லிம்­களை சீண்டி கோப­மூட்­டினால் அவர்கள் தம்­முடன் சண்­டைக்கு வரு­வார்கள். சந்­தர்ப்­பத்தை பயன்­ப­டுத்தி இன அழிப்பு ஒன்றை மேற்­கொள்­ளலாம். அது கைகூடா பட்­சத்தில் குறைந்­த­பட்சம் முஸ்­லிம்­களை நாட்டின் அமை­திக்கு கேடு வி­ளை­விக்கும் சக்­தி­க­ளாக காண்­பிக்­கலாம் என்று கடும்­போக்­கா­ளர்கள் ஒரு மனக் கணக்கு போட்­டி­ருந்­தனர்.

ஆனால், கோபம் எல்லை மீறு­கின்ற பல சந்­தர்ப்­பங்கள் ஏற்­பட்ட போதும் விட்­டுக்­கொ­டுப்பு மற்றும் பொறுமை என்­ப­வற்றை முஸ்­லிம்கள் கடைப்­பி­டித்து வந்­த­மையால் சிங்­கள பேரி­ன­வா­தத்தின் வலிந்­தி­ழுக்கும் இந்த சதி­வ­லைக்குள் அவர்கள் சிக்­க­வில்லை. ஹலாலை விட்டுக் கொடுத்­தது பெரிய இழப்­புத்தான் என்­பதில் இரு­வேறு கருத்­துக்கள் இல்லை.

ஆயினும், அப்­போது இன­வா­தி­க­ளோடு மல்­லுக்கு நின்­றி­ருந்தால் கிட்­டத்­தட்ட அளுத்­கம கல­வரம் போன்ற ஒரு நிலை­மையை ஒன்­றரை வரு­டங்­க­ளுக்கு முன்­னமே ஏற்­ப­டுத்­தி­யி­ருப்­பார்கள். ஆனால் அவர்­க­ளது எதிர்­பார்ப்பை நிறை­வேற்­று­வ­தற்­கான தருணம் அளுத்­கம பிர­தே­சத்­தி­லேயே கிடைத்­தது.

முஸ்­லிம்­களை அழித்­தொ­ழிக்க வேண்­டிய ஒரு நிலைமை ஏற்­ப­டு­மாயின் எவ்­வாறு நடந்து கொள்ள வேண்டும் என்­பதை கடந்த சில மாதங்­க­ளா­கவே பொது­ப­ல­சேனா மற்றும் அத­னது ஆத­ரவுச் சக்­திகள் கன­கச்­சி­த­மாக திட்­ட­மிட்­டி­ருந்­தன. முஸ்­லிம்கள் சிறு­பான்­மை­யாக வாழும் பிர­தே­சங்­களை இலக்­கு­வைத்தல், சிங்­க­ள­வர்­க­ளுக்கு பாதிப்­பில்­லாமல் தாக்­குதல் மேற்­கொள்ளல், வெளி­யாட்­களை பயன்­ப­டுத்­துதல்…. என்­ப­ன­வெல்லாம் அத்­திட்­டத்தின் உள்­ள­டக்கங்கள் என்­பது பின்­னாளில் தெரி­ய­வந்­தது.

இன­வாத சக்­திகள் பேரு­வ­ளையில் அட்­டூ­ழி­யத்தை மேற்­கொண்­டதன் மூலம் தமது திட்­டத்தின் நடை­முறைச் சாத்­தி­யத்தை பரீட்­சித்துப் பார்த்­தி­ருக்­கின்­றன என்றே கூற வேண்டும். 72 மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் இப் பிர­தேச மக்கள் அனு­ப­வித்த கொடு­மைகள் சிங்­கள இன­வா­தத்­தி­ட­மி­ருந்து 1915 கல­வ­ரத்­திற்குப் பின்னர் முஸ்­லிம்கள் அனு­ப­வித்த மிகப் பெரிய வன்­கொ­டு­மை­யாகும்.

அதனை எழுத்தில் எழு­த­வி­ய­லாது. “பயங்­க­ர­வாத யுத்­தத்தால் 30 வரு­டங்கள் அனு­ப­வித்­ததை நாங்கள் 3 நாட்­க­ளுக்குள் அனு­ப­வித்து விட்டோம்” என்று பிர­தே­ச­வாசி ஒருவர் கிழக்கைச் சேர்ந்த ஒரு முஸ்­லி­மிடம் கூறி­யி­ருக்­கின்றார் என்றால் - கள­நி­லை­மை­கள் எவ்­வாறு இருந்­தி­ருக்கும் என்­பதை மனக்கண்ணில் கற்­பனை செய்து பார்க்க முடியும். 

ஒரு ஜன­நா­யக நாட்டில் இப்­பேற்­பட்ட ஒரு இனச் சம்­ஹாரம் மேற்­கொள்­ளப்­பட்டால் அதற்கு எதி­ரான சட்ட நட­வ­டிக்கை எவ்­வ­ளவு கன­தி­யாக இருந்­தி­ருக்க வேண்டும்? சில கைதுகள் இடம்­பெற்­றி­ருக்­கின்­றன. இச் சந்­தேக நபர்­களுள் சிலர் மேலி­டத்து அழுத்­தங்­களால் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் விமர்­ச­னங்கள் எழுந்துள்­ளன. இது பாதிக்­கப்­பட்ட மக்கள் திருப்­திப்­படும் வகையில் காத்­தி­ர­மான சட்ட நட­வ­டிக்கைகள் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பது பொய்­யாக இருக்க வேண்­டு­மென மனது வேண்­டு­கின்­றது. 

வட்­ட­ரக்­கவின் பாத்­திரம் 

அண்­மைக்­கால முஸ்­லிம்கள் தொடர்­பான விவ­கா­ரங்­களில் வட்­ட­ரக்க விஜித தேரரும் ஒரு வகி­பா­கத்தை கொண்­டி­ருக்­கின்றார். மு.கா. ஸ்தாபக தலை­வ­ருடன் நல்­லெண்ண உறவை பேணி­யவர் என அறி­யப்­படும் இவ­ரது பாத்­திரம் ‘கௌரவ வேட­மாக’ ஆரம்­பித்து – பின்னர் ‘காமெடி கரெக்­ட­ராக’ ஆகி­வி­டு­வ­துண்டு.

அளுத்­கம கல­வரம் இடம்­பெற்றுக் கொண்­டி­ருந்த வேளையில் உட­லில் காயங்­க­ளுடன் முக்கால் நிர்­வாண கோலத்தில் புற­நகர் பகு­தியின் ஒதுக்குப் புற­மாக குப்­புற விழுந்த நிலையில் காணப்­பட்டார். பொது பல­சேனா அமைப்­பி­னரே இவரை தாக்­கி­யுள்­ள­தா­கவும் இவ­ருக்கு கத்னா (விருத்­த­சே­தனம்) செய்ய முயற்­சிக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் ஆரம்­பத்தில் குற்­றம்­சாட்­டப்­பட்­டது. பின்னர் அவ­ரது குடும்­பத்­தி­னரே இதனைச் செய்­துள்­ள­தாக தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன. பின்னர் அவர் தன்­னைத்­தானே இவ்­வாறு செய்து கொண்­ட­தாக சிரிப்­பூட்டும் செய்­திகள் வெளி­யா­கின.

தேரர் ஒருவர் - தானே தன்னைக் காயப்­ப­டுத்திக் கொண்டு, மர்ம உறுப்பை கீறிக் கொண்டு, பின்­பக்­க­மாக கைகளை கட்­டி­ய­வாறு, ஆடை­களை உரிந்­து­விட்டு ஒதுக்குப் புற­மாக குப்­பு­றப்­ப­டுத்­தி­ருக்­கின்றாரா? சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் அமைச்சர் மேர்வின் வத்­த­ளையில் சமுர்த்தி உத்­தி­யோ­கத்­தரை கட்­டி­வைத்து விசா­ரித்தார். பின்னர் தானே மரத்தில் கட்டிக் கொண்­ட­தாக அந்த உத்­தி­யோ­கத்தர் அறி­வித்தார். அந்த சம்­ப­வத்­தையே இது ஞாப­கப்­ப­டுத்­தி­யது.

எவ்­வா­றி­ருப்­பினும், தனக்­குத்­தானே காயப்­ப­டுத்திக் கொண்­டதை வட்­ட­ரக்க தேரர் வாக்­கு­மூ­லத்தில் ஒப்புக் கொண்­டுள்­ள­தாக பொலிஸ் தரப்பு உத்­தி­யோ­க­பூர்­வ­மாக அறி­வித்­துள்­ளது. அதனைத் தொடர்ந்து அவர் கைது செய்­யப்­பட்டு விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார். இருப்­பினும், வட்­ட­ரக்க தேரரை வற்­பு­றுத்தி வாக்­கு­மூலம் பெறப்­பட்­டுள்­ள­தாக தேரரின் சட்­டத்­த­ரணி கூறிக் கொண்­டி­ருப்­ப­தாக அறி­ய­மு­டி­கின்­றது.

சில மாதங்­க­ளுக்கு முன்னர் கொழும்பு நிப்போன் ஹோட்­டலில் பத்­தி­ரி­கை­யாளர் மாநாட்டை ஏற்­பாடு செய்­தி­ருந்த வட்­ட­ரக்க தேரர், பொது­ப­ல­சேனா வந்து கலகம் புரிந்­ததை அடுத்து இது­போ­லவே பெல்டி அடித்து தனது நிலைப்­பாட்டை மாற்றிக் கொண்டார் என்­ப­தையும் நினை­வு­ப­டுத்த விரும்­பு­கின்றேன்.

தன்­னைத்­தானே காயப்­ப­டுத்திக் கொண்ட வட்­ட­ரக்க தேரர் விளக்­க­ம­றி­யலில் அடைக்­கப்­பட்­டுள்ளார், அமை­தி­யான கடை­ய­டைப்­புக்கு அழைப்­பு­வி­டுத்த முஜிபுர் ரஹ்மான் விசா­ரிக்­கப்பட்­டுள்ளார். ஆனால் பெரு­ம­ளவு உயிர் மற்றும் சொத்து இழப்­புக்­களை ஏற்­ப­டுத்­திய இன­வாத காடை­யர்­களும் அதற்கு கார­ண­மா­ன­வர்­களும் இன்னும் சட்­டத்தால் கண்டு கொள்­ளப்­ப­ட­வில்­லையே என்று நண்பர் ஒருவர் என்­னிடம் கேட்­ட­போது வாய­டைத்துப் போனேன்.

இதற்­கான பதிலை பாது­காப்பு தரப்பு வெளி­யிட்­டி­ருக்­கின்­றது. அதா­வது – சம்­பந்­தப்­பட்­ட­வர்­களை கைது செய்தால் அவர்கள் ஹீரோ ஆகி­வி­டு­வார்கள். அத்­துடன் கல­வரம் வெடிக்கும். எனவே கைது செய்­வ­தற்­கான நேரம் வரும்­போது அதனைச் செய்வோம் என்ற அர்த்தத்தில் பதி­ல­ளிக்­கப்­பட்­டுள்­ளது. உண்­மை­யாகச் சொன்னால், இப்­பேற்­பட்ட ஒரு இனக்­ க­ல­வ­ரத்தை முன்­னின்று நடத்­தி­ய­வர்களை சட்­டத்தின் முன் நிறுத்த வேண்டும். அத­னைத் தான் சட்­டத்தின் ஆட்சி என்­பது.

ஆயினும், பாதுகாப்பு தரப்­பி­னரின் கருத்தில் நடை­முறை யதார்த்­தமும் இருக்­கின்­றது என்­பதை மறந்­து­விடக் கூடாது. இது இவ்­வா­றி­ருக்க, அளுத்­கம பற்றி எரிந்­த­போது நாடு திரும்­பிய ஜனா­தி­ப­திக்கும் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் இடை­யி­லான சந்­திப்­பொன்று பது­ளையில் இடம்­பெற்­றது. இதில் முக்­கிய ஐந்து தீர்­மா­னங்கள் நிறை­வேற்­றப்­பட்­டன.

அதா­கப்­பட்­டது -
ஜனா­தி­பதி விஷேட அறிக்கை ஒன்றை விடு­வது, யார் என்­றாலும் ஒரு இனத்தை தாக்கிப் பேசு­வதை கண்­டிப்­பாக நிறுத்­துதல், பொலிஸ் மா அதிபர் கடு­மை­யான பாது­காப்பு நட­வ­டிக்­கை­களை மேற்­கொள்ளல், வாரந்­தோறும் ஒன்­று­கூடி அவ்­வா­ரத்தில் இடம்­பெற்ற விட­யங்­களை ஆராய்தல் போன்ற தீர்­மா­னங்­களே இங்கு எடுக்­கப்­பட்­டன.

அளுத்­க­மயில் முற்­று­மு­ழு­தாக பதற்றம் அடங்­கி­ருக்­காத நிலையில் இடம்­பெற்ற இக் கூட்­டத்தில் அங்கு நடந்­தே­றிய இன­அ­ழிப்பு தொடர்­பாக எந்­த­வொரு நேரடி தீர்­மா­னமும் மேற்­கொள்­ளப்­ப­ட­வில்லை என்­பது கவ­னிப்­பிற்­கு­ரி­யது. இந்து சமுத்­தி­ரத்தின் கண்ணீர் துளிபோல் தொங்கிக் கொண்­டி­ருக்கும் இலங்­கையின் வர­லாற்றில் மிகப் பெரும் சாபக்­கே­டாக பயங்­க­ர­வாதம் இருந்­தது.

அதற்­க­டுத்த சாபக்­கே­டாக இன­வாதம் வளர்ச்சி கண்­டு­வ­ரு­கின்­றது. 30 வருட யுத்தம் ஏற்­ப­டுத்­திய இழப்­புக்­களை மூன்று நாட்­க­ளுக்குள் அளுத்­கம மக்கள் அனு­ப­வித்­தி­ருக்­கின்­றார்கள் என்றால், இன­வாதம் எந்­த­ள­வுக்கு கொடூ­ர­மா­னதும் வலி­மை­யா­னதும் என்­பதை சின்னப் பிள்­ளை­கூட உணர்ந்து கொள்ளும்.

இன­வா­தத்தின் அடை­யாளம் 1990களில் சிங்­கள அடிப்­ப­டை­வாத கருத்­தி­யலை வித்­திட்­ட­வ­ராக கங்­கொ­ட­வில சோம தேரரை குறிப்­பிட முடியும். கருத்­தி­யல்­ரீ­தி­யான இன­வா­தத்தின் அடை­யா­ள­மாக அவர் திகழ்ந்தார். இருப்­பினும் அவர் இந்­த­ள­வுக்கு இறங்கி வந்து இன­வாதம் செய்­த­தாக ஞாபகம் இல்லை.

அது­போ­லவே, தற்­கா­லத்தில் கருத்­தியல் மற்றும் இயக்­க­வியல் அடிப்­ப­டை­யி­லான இன­வா­தத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான பொறுப்பை பொது­ப­ல­சே­னாவின் ஞான­சாரர் ஏற்றிருக்கிறார். அல்லது அவ­ரிடம் அப்பொறுப்பு ஒப்ப­டைக்­கப்­பட்­டி­ருக்­கின்­றது. முஸ்­லிம்­களின் பொரு­ளா­தார, சமூக, அர­சியல் வளர்ச்சி அவர்­க­ளது ஒற்­றுமை என்­பவை இன­வாத சக்­தி­களை கிலி கொள்ளச் செய்­தி­ருக்­கின்­றன.

இதற்கு முஸ்­லிம்­களின் சில செயற்­பா­டு­களும் கார­ண­மாக அமைந்­துள்­ளதை ஏற்றுக் கொள்ள வேண்டும். முஸ்­லிம்கள் தமது மார்க்க அனுஷ்­டா­ன­மாக கடைப்­பி­டிக்­கின்ற விட­யங்­களை சிங்­கள மக்கள் குறிப்­பாக இன­வா­திகள் வேறு கண்­கொண்டு பார்க்­கின்­றனர். இதனால் சுய­புத்­தி­யுடன் சிந்­திக்­காத சிங்­கள மக்­களை வழி­ந­டாத்­து­வது கடும்­போக்கு சக்­தி­க­ளுக்கு இல­கு­வாக இருக்­கின்­றது.

சில மாதங்­க­ளுக்கு முன்னர் சிங்­கள தொலைக்­காட்­சியில் ஒரு செய்தி ஒளி­ப­ரப்­பா­னது. அதில் மல்­வத்து பீடா­தி­ப­தியை ஞான­சாரதேரர் சந்­தித்தார். “இலங்­கை­யி­லுள்ள தௌஹீத் போன்ற அமைப்­புக்கள் பௌத்த நம்­பிக்­கை­களை விமர்­சிக்­கின்­றன” எனக் கூறிய ஞான­சார தேரர் அது தொடர்­பான காணொ­ளியை பீடா­தி­ப­திக்கு மடி­க­ணனியில் காண்­பிக்­கின்றார்.

பௌத்தத்தை விமர்­சிக்கும் உரை ஒளி­ப­ரப்­பா­கின்­றது. “நாங்கள் பௌத்­தத்தை பாது­காக்­கவே பாடு­ப­டு­கின்றோம் நீங்கள் இதனை நிறுத்தச் சொன்னால் இப்­போதே எமது நட­வ­டிக்­கை­களை நிறுத்தி விடு­கின்றோம். மகா சங்­கத்­தினரே உங்­க­ளது ஆசீர்­வா­த­மின்றி எதையும் நாம் செய்ய மாட்டோம்” என்று தேரர் கூறு­கின்றார். அப்­போது பீடா­தி­பதி என்­னவோ (.....)கூறு­கின்றார். செய்தி முடி­கின்­றது.


இலங்­கையில் இவ்­வா­றான நிலைமை ஏற்பட்டுள்ளமைக்கு காரணத்தை கண்டறிந்து அரசாங்கம் திருப்திப்படுமளவுக்கு நடவடிக்கை எடுக்காது இருப்பது தெரிந்த சங்கதிதான். ஆயினும், இந்த நாட்டின் பாரம்பரியம் தெரிந்த பௌத்த பீடங்கள் பொதுபலசேனா மற்றும் ஏனைய கடும்போக்கு அமைப்புக்களின் தீவிரப் போக்கை தணியச் செய்வதற்கான அறி க்கைகளைக் கூட இதுவரை வெளியிடாமை முஸ்லிம்களின் மனதில் புதிய கவலையாக உருவெடுத்துள்ளது.

"சகோதர இனங்கள் - பிட்டும் தேங்காய் பூவும் என்றெல்லாம் மயக்கும் வார்த்தைகளை கூறிக் கொண்டிருந்த சிங்கள பேரினவாதம் மனதில் எத்தனை பொறாமையும் வஞ்சகத்தையும் இத்தனை காலமும் மறைத்து வைத்திருக்கின்றது என்பதை 1983 ஆம் ஆண்டு ஜூலைக் கலவரத்தின் பாணியிலான அளுத்கம கலவர மானது முகமூடி கிழித்து வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றது.

ஊடகங்களின் சர்வதேச மயப்படுத்தலும், சர்வதேச அழுத்தமும், முஸ்லிம்களின் முழுமையான ஒற்றுமையுடனான கடையடைப்பும் அதிகார தரப்பை துணுக்குறச் செய்திருக்கின்றது. அண்மைக்காலமாக ஒரு எல்லைக்குள் தமது செயற்பாட்டை முடக்கிக் கொண்டுள்ள ஜம்மியத்துல் உலமா சபையும், குத்துக்கரணம் அடி த்தாலும் அரசிடம் இருந்து எதனையும் பெற்று விட முடியாத நிலையிலுள்ள முஸ்லிம் அமைச்சர்களும் பாரதூரம் அறியாமல் உணர்ச்சிபூர்வமான கருத்துக்களை வெளியிடும் அமைப்புக் களும் - இந்த ‘சீசன்’ முடிந்ததும் இனவாதிகளால் தமக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு பாவமன்னிப்பு அளிப்பவர்களாக மாறிவிடுவார்கள்.

இன்னுமொரு தடவை இனவாதிகள் கையில் ஆயுதத்தை தூக்கும் வரைக்கும் அப்படியே நடந்ததை மறந்து விடுவார்கள். இன்றிலிருந்து ‘தலைப்பிறை’ சண்டை தொடங்கும் !