Breaking News

இரண்டாவது ரோந்துப் படகை சிறிலங்காவுக்கு வழங்கும் ஆவணத்தில் ஒப்பமிட்டது அவுஸ்ரேலியா

சிறிலங்கா கடற்படைக்கு இரண்டாவது ஆழ்கடல்
ரோந்துப் படகைக் கையளிப்பதற்கான ஆவணத்தில், அவுஸ்ரேலியா நேற்று ஒப்பமிட்டுள்ளது. கொழும்பில் உள்ள அவுஸ்ரேலியத் தூதுவர், றொபின் முடி மற்றும் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் ஜெயநாத் கொலம்பகே ஆகியோர் இந்த ஆவணத்தில் ஒப்பமிட்டுள்ளனர். 

அவுஸ்ரேலியாவுக்கு படகுகளில் அகதிகள் செல்வதைக் கட்டுப்படுத்துவதற்காக, கடந்த நொவம்பர் மாதம் இரண்டு ரோந்துப் படகுகளை சிறிலங்கா கடற்படைக்கு வழங்க அவுஸ்ரேலியா முன்வந்திருந்தது. இவற்றில் முதலாவது படகு, கடந்த ஏப்ரல் 24ம் நாள், சிறிலங்காவுக்கு கொண்டு வரப்பட்டு, கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டது. 

இதற்கு பி-350 என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தநிலையிலேயே இரண்டாவது படகை வழங்கும் ஆவணத்தில் நேற்று ஒப்பமிடப்பட்டுள்ளது. விரைவில் இது கொழும்புக்கு கொண்டு வரப்படும் என்று தெரியவருகிறது.