Breaking News

தென்னாபிரிக்க விடுதலை அமைப்பு போன்று நாம் செயற்படவேண்டும் – மாவை!

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு

தென்­னா­பி­ரிக்­காவின் விடு­தலை அமைப்பு அடக்­க­மா­கவும்
அமை­தி­யா­கவும் செயற்­பட்­ட­துபோல் நாம் செயற்­பட வேண்டும். அப்­பொ­ழு­துதான் எமது நோக்­கத்தை அடைய முடியும் என தமி­ழ­ரசுக் கட்­சியின் பொது செய­லா­ளரும் யாழ். மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மா­கிய மாவை சேனா­தி­ராஜா தெரி­வித்தார்.

கடந்த திங்­கட்­கி­ழமை திரு­கோ­ண­மலை நக­ராண்மைக் கழக கேட்போர் கூடத்தில் முன்னாள் திரு­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் க. துரை­ரெட்­ண­சிங்கம் தலை­மையில் நடை­பெற்ற தமி­ழ­ரசுக் கட்­சியின் பிர­மு­கர்­க­ளுக்­கான கலந்­து­ரை­யா­ட­லின்­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்து உரை­யாற்­று­கையில், இவ்­வா­ரத்­துக்குள் கூட்­ட­மைப்பு இந்­தி­யா­வுக்கு செல்­ல­வி­ருப்­ப­துடன் பல்­வேறு விட­யங்கள் பற்றி இந்­தியப் பிர­த­ம­ருடன் கலந்­து­ரை­யா­ட­வுள்­ளது.அண்­மையில் இலங்­கைக்கு விஜயம் செய்த தென்­னா­பி­ரிக்க உப ஜனா­தி­பதி சம­போஷா கூறிய கருத்­தொன்றை நான் உங்­க­ளுக்கு ஞாப­கப்­ப­டுத்த விரும்­பு­கின்றேன்.

தென்­னா­பி­ரிக்­கா­வி­லுள்ள பல்­வேறு குழுக்­க­ளுடன் கூட்­டா­கவும் தனி­யா­கவும் கலந்­து­பேசி ஆக்­க­பூர்­வ­மான தீர்­மா­னங்­களை அமை­தி­யான முறையில் எடுத்து போரா­டி­யதன் கார­ண­மா­கவே தென்­னா­பி­ரிக்­கா­வுக்கு சுதந்­திரம் கிடைத்­தது. எமது போராட்டம் வெற்றி பெற முடிந்­தது என சம­போஷா எம்­மிடம் குறிப்­பிட்டார். அது­போ­லவே நாமும் செயற்­பட வேண்டும்.

எமது நோக்­கத்­துக்­காக உழைக்க வேண்டும். அடுத்த மாதம் வன்­னியில் நடை­பெறும் தமி­ழ­ரசுக் கட்­சியின் வரு­டாந்த மாநாடு மிகச் சிறந்த முறையில் நடை­பெற எல்­லோரும் ஒத்­து­ழைக்க வேண்டும். மாநாட்­டுக்கு முன் கிளைகள் அனைத்தும் புன­ர­மைக்­கப்­பட வேண்­டு­மென எதிர்­பார்க்­கின்றோம். 

எல்­லா­வற்­றுக்கும் மேலாக நாம் நமது நோக்­கத்தை அடைய வேண்­டு­மானால் அறிக்­கை­களை விட்டோ ஆர­வா­ரங்­களை செய்தோ நடந்­து­கொள்­ளக்­கூ­டாது. அவ்­வாறு செய்­கின்ற போது அது எமக்கு பாத­க­மாக அமைந்து விடு­கி­றது. எமது நோக்கை அடைய எல்­லோரும் அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பட வேண்­டு­மென்றார்.

இக்­க­லந்­து­ரை­யா­டலில் கிழக்கு மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தண்டாயுதபாணி, திருகோணமலை நகர சபைத் தலைவர் க.செல்வராஜா, உப்புவெளி பிரதேச சபை தவிசாளர் விஜேந்திரன் மற்றும் மாகாண சபை, நகர சபை பிரதேச சபை உறுப்பினர்களும் பிரசன்னமாகி இருந்தனர்.