Breaking News

இலட்சக்கணக்கானவர்களை பாதுகாக்க ஐநா தவறிவிட்டது: நவி பிள்ளை

எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு


உலக அளவில் நடக்கும் பல்வேறு மோதல்களை தடுப்பதில்
ஐநாவின் பாதுகாப்புப்பேரவை உரியமுறையில் செயற்படவில்லை என்று பதவி விலகிச்செல்லும் ஐநா மனித உரிமைகள் ஆணையர் நவி பிள்ளை கடுமையாக விமர்சித்திருக்கிறார்.

ஐநாவின் பாதுகாப்புப்பேரவை மேலதிகமான பொறுப்புடனும் உடனுக்குடனும் செயற்பட்டிருந்தால், லட்சக்கணக்கான மனித உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்திருக்கிறார் நவி பிள்ளை. பதினைந்து உறுப்பினர்களைக்கொண்ட ஐநாவின் பாதுகாப்புச்சபையில் பேசும்போது அவர் இதை தெரிவித்திருக்கிறார்.

ஐநாவின் பாதுகாப்புப்பேரவை மேலதிகமான பொறுப்புடனும் உடனுக்குடனும் செயற்பட்டிருந்தால், லட்சக்கணக்கான மனித உயிர்களை பாதுகாத்திருக்க முடியும் என்று தாம் உறுதியாக நம்புவதாக தெரிவித்திருக்கிறார் நவி பிள்ளை.

பதினைந்து உறுப்பினர்களைக்கொண்ட ஐநாவின் பாதுகாப்புச்சபையில் பேசும்போது அவர் இதை தெரிவித்திருக்கிறார். சகித்துக்கொள்ள முடியாத மனித துன்புறுத்தல்கள், சர்வதேச அமைதியையும் பாதுகாப்பையும் பாரதூரமாக மீறிய சம்பவங்களையும் அவற்றுக்கு நீண்டகால ஆபத்துக்களை உருவாக்கக்கூடிய நிகழ்வுகளையும் ஐநா பாதுகாப்புச்சபை இரண்டாம்பட்சமாக கருது செயற்பட்டதாக அவர் விமர்சித்திருக்கிறார்.

இதற்குக் காரணம், ஐநா பாதுகாப்புச்சபையின் உறுப்புநாடுகள் தத்தமது குறுகியகால பிராந்திய, அரசியல் தேவைகள், குறுகிய நோக்கில் வரையறுக்கப்பட்ட தேசிய நலன்களுக்கு பலசமயங்களில் முக்கியத்துவம் கொடுத்து செயற்பட்டன என்று கூறினார் நவி பிள்ளை. தமது ஆறு ஆண்டுகால பதவிக்காலம் நிறைவடையும் நிலையில் அவர் ஐநாவின் பாதுகாப்புச்சபையில் தமது இந்த விமர்சனக் கருத்துக்களை வெளிப்படையாக தெரிவித்திருக்கிறார்.

உலகில் பல்வேறு நாடுகளில் நடந்துகொண்டிருக்கும் மோதல்களை தடுப்பது என்பது சிக்கலான ஒன்று தான் என்றாலும் அதை செய்யமுடியும் என்று நவி பிள்ளை நம்பிக்கை வெளியிட்டார். இந்த மோதல்கள் எவையுமே எந்த எச்சரிக்கைகளும் இல்லாமல் திடீரென்று ஒரே நாளில் தோன்றியவை அல்ல என்று தெரிவித்த நவி பிள்ளை, பல ஆண்டுகளாக, இன்னும் சொல்வதானால் பல தசாப்தகாலம் இந்த பிரச்சனைகள்,

மோதல்கள் எல்லாம் படிப்படியாக வளர்ந்தன என்று தெரிவித்த நவிபிள்ளை, இவற்றின் அடிப்படை மூலம் என்பது மனித உரிமைகள் தொடர்பான தீர்க்கப்படாத குறைகளே என்றும் கூறினார். மனித உரிமைகளைக் காப்பாற்றினால் மோதல்கள் தடுக்கப்படும் மோதல்களை தடுப்பதில் மனித உரிமைகள் எப்போதுமே மையமானவை என்று தெரிவித்த நவி பிள்ளை, பாலியல் துஷ்பிரயோகம் உள்ளிட்ட மனித உரிமைமீறல் சம்பவங்கள் மோதல்கள் மோசமாகப்போவதற்கான ஆரம்பகால அறிகுறிகளை குறிப்பதாக தெரிவித்தார்.

மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பான ஐநா மனித உரிமை ஆணையத்தின் ஆர்வமும் செயற்பாடுகளும் தமது பதவிக்காலத்தில் கணிசமான அளவுக்கு அதிகரித்திருந்தன என்றும் அவர் கூறினார். ஆனாலும் பல்வேறு சமயங்களில், சம்பவங்களில் நடந்த பாரதூரமான மனித உரிமை மீறல்கள் குறித்து ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவலகமும் வேறு பல மனித உரிமைகளுக்கான அமைப்புக்களும் திரும்பத்திரும்ப எச்சரித்தும் கூட இந்த மோதல்களை நிறுத்தி,

மனித உரிமை மீறல்களை தடுப்பதற்கான கொள்கை சார்ந்த உறுதியான நடவடிக்கைகளை ஐநாபாதுகாப்புச்சபையின் உறுப்பு நாடுகள் எல்லா சமயங்களிலும் எடுக்கவில்லை என்றும் நவி பிள்ளை தெரிவித்தார். நவி பிள்ளை இலங்கைக்கு வந்திருந்தபோது (ஆவணப்படம்) நவி பிள்ளை இலங்கைக்கு வந்திருந்தபோது (ஆவணப்படம்) எதிர்காலத்தில் இதுபோன்ற மனித உரிமை மீறல்களை உடனடியாகவும்,

நெகிழ்வுத்தன்மையுடனும் எதிர்கொள்ளவேண்டுமானால் அதற்குத் தேவையான நிதி ஆதாரங்களுடனான மனித உரிமை கண்காணிப்பு அமைப்புக்களை ஐநாவின் பாதுகாப்புச்சபை புதிதாக உருவாக்கவேண்டும் என்று நவி பிள்ளை ஆலோசனை தெரிவித்தார்.

“உள்ளதை உள்ளபடி சொன்னவர் நவிபிள்ளை” நவி பிள்ளையின் கருத்துக்களுக்கு பதிலளித்துப்பேசிய ஐநாவின் செயலாளர் நாயகம் பான்கி மூன், மனித உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் ஐநா பாதுகாப்புச்சபை உலக நாடுகளின் அரசுகளுடன் ஒன்றிணைதல், ஒத்துழைத்தல் மற்றும் சேர்ந்து செயற்படுதலுக்கான புதிய காலகட்டம் உருவாகியிருப்பதாக நம்பிக்கை வெளியிட்டார்.

உலக அளவில் நம் சமகாலத்தில் முகம் கொடுத்துக்கொண்டிருக்கும் பாரதூரமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நவி பிள்ளையின் நேர்மையான கருத்துக்கள் மற்றும் நகாசுபூச்சு செய்யப்படாத வெளிப்படையான அறிக்கைகளில் இருந்து ஐநா பாதுகாப்புச்சபை உறுப்பினர்கள் பெருமளவு பயன்பெற்றார்கள் என்றும் அவர் கூறினார்.

“தாம் கண்டதை கண்டபடியே சொல்லுவார் நவி பிள்ளை. மனித உரிமைகள் மீறப்படும்போதும், மனிதர்கள் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாகும்போதும் பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் வாதாடும் வழக்கறிஞராக நவி பிள்ளை இருப்பார் என்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியும்.

மற்றவர்கள் சிலபல விஷயங்களை பேசத்தயங்கும் சமயங்களில்கூட, நவி பிள்ளை தைரியமாக வெளிப்படையாக பேசத்தயங்காதவர். பயம் இல்லாமல் பேசக்கூடியவர்” என்றார் பான்கி மூன். நவி பிள்ளையின் ஐநா பணி முடிவுக்கு வந்தாலும் ஐநா பாதுகாப்புச்சபையையும், உலக மனிதர்களையும் பாதிக்கும் பிரச்சனைகளை எதிர்கொள்வதற்கான முக்கிய குரலாக நவிபிள்ளையின் குரல் தொடர்ந்து ஒலிக்கும் என்று பான் கி மூன் நம்பிக்கை வெளியிட்டார்.

கடந்த ஆறு ஆண்டுகளாக நவி பிள்ளையுடன் இணைந்து பணி செய்ய நேர்ந்தது குறித்து தாம் நன்றியுடன் பெருமையடைவதாகவும் பான்கி மூன் தெரிவித்தார்.