”தமிழ் சினிமா 2014” ஒரு பார்வை - THAMILKINGDOM ”தமிழ் சினிமா 2014” ஒரு பார்வை - THAMILKINGDOM
 • Latest News

  ”தமிழ் சினிமா 2014” ஒரு பார்வை

  இந்த ஆண்டு நிறைவடையும் நிலையில் தமிழ் சினிமாவில் மொத்தம் 213 திரைப்படங்கள் வெளியாகியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. தமிழ்த் திரையுலகில் 200 படங்களுக்கும் மேல் வெளியாவது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.


  கடந்த 2013ஆம் ஆண்டில் 153 திரைப்படங்களே வெளியானது. ஆனால் இந்த ஆண்டு கடந்த ஆண்டைவிட 80 படங்கள் கூடுதலாக வெளியாகியுள்ளன.அதேநேரத்தில் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெற்றி பெற்ற படங்கள் அதிகம் எனவும் குறிப்பிடப்படுகிறது.இந்த ஆண்டு சுமார் 25 படங்களுக்கும் மேல் நல்ல வெற்றியை பெற்று தயாரிப்பாளர்களுக்கு பெரும் லாபத்தை சம்பாதித்து கொடுத்துள்ளது.

  கோலி சோடா, தெகிடி, மான் கராத்தே, குக்கூ, என்னமோ நடக்குது, யாமிருக்க பயமே, வீரம், மஞ்சப்பை, முண்டாசுப்பட்டி, சதுரங்க வேட்டை, வேலை இல்லா பட்டதாரி, ஜிகிர்தண்டா, கதை திரைக்கதை வசனம் இயக்கம், சலீம், அரண்மனை, நாய்கள் ஜாக்கிரதை, பிசாசு, மெட்ராஸ், கத்தி, பூஜை, வெள்ளக்காரதுரை ஆகிய படங்கள் குறிப்பிட்டு சொல்லும்படியான வெற்றிப் படங்கள் ஆகும்.

  பெரிய நடிகர்களை பொறுத்தவரையில் ரஜினி, விஜய் ஆகிய இருவரும் இந்த வருடம் தலா இரண்டு படங்களில் நடித்தனர். ரஜினியின் கோச்சடையான், லிங்கா மற்றும் விஜயின் ஜில்லா, கத்தி ஆகிய படங்கள் வெளியாகின. கோச்சடையான் மற்றும் லிங்கா ஆகிய இரு ரஜினி படங்களும் சுமாரான வெற்றியை பெற்றது. விஜய்யின் ஜில்லா சுமாரான வெற்றியும், கத்தி நல்ல வசூலையும் கொடுத்தது.

  அஜித் மற்றும் சூர்யா ஆகிய இருவருக்கும் ஒரே படம்தான் இந்த வருடத்தில் வெளியானது. அஜித்தின் வீரம் நல்ல வெற்றியை பெற்று தயாரிப்பாளரை திருப்திபடுத்திய நிலையில் சூர்யாவின் அஞ்சான் அனைத்து தரப்பினர்களுக்கும் ஏமாற்றத்தை கொடுத்தது.

  மேலும் இந்த வருடத்தில் தமிழ் சினிமாவில் முக்கிய பிரபலங்கள் சிலர் காலமாகினர். அவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் கே.பாலசந்தர், பாலுமகேந்திரா, ருத்ரைய்யா, நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன், காதல் தண்டபாணி, நடிகை அஞ்சலி தேவி, தயாரிப்பாளர் இராம.நாராயணன், மற்றும் ஒளிப்திவாளர் அசோக்குமார் ஆகியோர்.

  நூறு கோடி வசூல்செய்த படங்கள்

  தமிழ் சினிமா தற்போது அடுத்த கட்டத்தை நோக்கி பயணித்து வருகிறது. அந்த வகையில் பாலிவுட் படங்களுக்கு போட்டியாக நம் படமும் ரூ 100 கோடி வசூலை அள்ளி வருகிறது. இதில் பெரும்பாலும் உச்ச நடிகர்களின் படங்களே இடம்பெற்றுள்ளது. அதை பற்றிய ஒரு தொகுப்பு தான் இந்த பகுதி(இவை அனைத்தும் அதிக வசூல் செய்த படங்கள் என விக்கிபீடியாவில் இருந்து எடுக்கப்பட்டவை).
  1)எந்திரன்
  தமிழ் சினிமாவை உலக அளவில் கொண்டு சென்றவர் ஷங்கர். இவர் இயக்கிய எந்திரன் தமிழ் நாடு மட்டுமின்றி மொத்த இந்தியாவையும் திரும்பி பார்க்க வைத்தது. இப்படம் ரூ 256 கோடி வசூல் செய்ததாக கூறப்பட்டுள்ளது.
  2)விஸ்வரூபம்
  படம் பெயர் மட்டுமில்லை, இது கமலின் விஸ்வரூபமும் கூட, பல கட்ட பிரச்சனைகளை தாண்டி வெளிவந்த இந்த படம் சுமார் 220 கோடி ரூபாய் வரை வசூலித்துள்ளது.
  3)தசவதாரம்
  கமலின் கடினமான நடிப்பில் கே.எஸ்.ரவிக்குமாரின் கமர்ஷியல் இயக்கத்தில் வெளிவந்த தசவதாரம் அந்த வருடத்தின் மாபெரும் வெற்றி பெற்றது. இப்படம் ரூ 200 கோடி வசூல் செய்ததாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் இல்லை.
  4)துப்பாக்கி
  ரஜினி, கமலுக்கு அடுத்த இடத்தில் விஜய் தான் இருக்கிறார். விஜய்யின் கேரியரில் மிக முக்கியமான படம் துப்பாக்கி. முருகதாஸ் இயக்கத்தில் விஜய்யின் அதிரடி ஆக்‌ஷனில் இப்படம் ரூ 180 கோடி வசூல் செய்துள்ளது.
  5)ஆரம்பம், மங்காத்தா, வீரம்
  அதிக வசூல் செய்த படங்களில் அந்த கருத்து கணிப்பில் 5,6,7 ஆகிய மூன்று இடத்தையும் அஜித் தான் பிடித்துள்ளார். இவர் நடிப்பில் வெளியான ஆரம்பம் ரூ 135 கோடி, மங்காத்தா ரூ 130 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. மங்காத்தா வசூல் குறித்து பிரபல தொலைக்காட்சியும் குறிப்பிட்டு இருந்தது. அதே போல வீரம் ரூ 130 கோடி வசூல் செய்ததாக பிரபல ஆங்கில பத்திரிக்கை வெளியிட்டு இருந்தது.
  6)சிவாஜி
  தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை முதன் முதலாக இந்திய அளவில் கொண்டு சென்ற படம். ஷங்கரின் பிரம்மாண்டம், ரஜினியின் ஸ்டையில் என முதன் முதலாக இணைந்த இந்த கூட்டணி ரூ 128 கோடி வரை வசூல் செய்துள்ளது.
  7)கத்தி
  துப்பாக்கி வெற்றியை தொடர்ந்து விஜய்+முருகதாஸ் இணைந்த கத்தி இந்த வருடம் தீபாவளிக்கு வெளிவந்து வசூல் வேட்டை நடத்தியது. இப்படம் இன்னும் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருப்பதால், தற்போது வரை ரூ 124.5 கோடி வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
  8)சிங்கம்-2
  ரஜினி, கமல், அஜித், விஜய் இவர்களுக்கு பிறகு இதில் இடம்பிடிப்பவர் சூர்யா. இவர் நடிப்பில் ஹரியின் ஆக்‌ஷன் திரைக்கதை மற்றும் இயக்கத்தில் வெளிவந்த சிங்கம்-2 ரூ 100 கோடி வசூல் செய்துள்ளது.
  மேலும், லிங்கா திரைக்கு வந்து 1 வாரமே ஆனதால் அதிகாரப்பூர்வ அறிவுப்பு ஏதும் இல்லை, இந்த சாதனையை முறியடிக்க மீண்டும் ஷங்கரின் ஐ, கமலின் விஸ்வரூபம்-2, அஜித்தின் என்னை அறிந்தால் வெயிட்டிங். பொறுத்திருந்து பார்ப்போம்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: ”தமிழ் சினிமா 2014” ஒரு பார்வை Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top