மாவட்ட குழுக்கூட்ட மோதல்! ஜனவரியில் விசாரணை
யாழ்.பொலிஸ் நிலையத்தினால் அழைக்கப்பட்ட கூட்டமைப்பின் பிரதிநிதிகளை எதிர்வரும் ஜனவரிமாதம் 12 ஆம் திகதி மீண்டும் வருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர்.
யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டத்தில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஈ.பி.டி.பியின் முறைப்பாட்டிற்கமைய தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் எண்மர் பொலிஸ் விசாரணைக்கான அழைக்கப்பட்டிருந்தனர்.
இன்றையதினம் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிகளான வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம், கஜதீபன் மற்றும் காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் ஆனைமுகன் ஆகியோர் சென்றிருந்தனர். இருப்பினும் எண்மரில் மூவருக்கு மட்டுமே பொலிஸார் அழைப்பாணை விடுத்துள்ளனர். எனவே மீதமானவர்களுக்கும் அழைப்பாணை விடுப்பதுடன் ஈ.பி.டி.பியினரையும் வருமாறு அழைக்கவுள்ளனர்.
அதற்கமைய ஜனவரி 12 ஆம் திகதி மீண்டும் பொலிஸ் விசாரணைக்கு வருமாறு பொலிஸார் அறிவித்துள்ளனர். அத்துடன் சம்பவம் தொடர்பிலான பூரண அறிக்கையொன்று எதிர்வரும் 16 ஆம் திகதி நீதிமன்றத்தில் பொலிஸாரால் சமர்ப்பிக்கப்படவுள்ளது.








