Breaking News

திஸ்ஸவின் போலி ஆவணம்! விசாரணை ஆரம்பம்

பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தனக்கும் இடையில் இரகசிய ஒப்ப்ந்தம் செய்துகொள்ளப்பட்டிருப்பதாகக் கூறி அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்க சமர்ப்பித்த போலி ஆவணங்கள் தொடர்பில் எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.
இந்நிலையில், எழுத்து மூலமான ரணிலின் முறைப்பாட்டின் மீது தற்போது விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.பொலிஸ் மா அதிபருக்குக் கிடைத்த இந்த முறைப்பாட்டையடுத்து அவர் நேற்று செவ்வாய்க்கிழமை கொழும்பு குற்றத் தடுப்புப் பணியகத்திற்கு விசாரணைக்கு உத்தரவிட்டிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அது என்னுடைய கையெழுத்து அல்ல

பொதுஎதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் நான் செய்­துள்­ள­தாக கூறப்­படும் இர­க­சிய உடன்­ப­டிக்கை பொய்­யா­னது. உடன்­ப­டிக்­கையில் இடப்­பட்­டுள்ள கையெ­ழுத்து என்­னு­டை­யது அல்ல என தெரி­விக்கும் எதிர்க்­கட்சி தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, அர­சாங்­கத்தின் நட­வ­டிக்கை தொடர்பில் பொலிஸ்மா அதி­ப­ரிடம் முறைப்­பாடு செய்­துள்ளேன்.

அமைச்சர் திஸ்ஸ அத்­த­நா­யக மீது நட­வ­டிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்­பிட்டார்.எதிர்க்­கட்சி தலைவர் காரி­யா­ல­யத்தில் நேற்று ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்பொது எதி­ர­ணியின் மீது அர­சாங்கம் தொடர்ச்­சி­யாக குற்றம் சுமத்தி வரு­கின்­றது. இப்­போதும் பொது எதி­ரணி வேட்­பாளர் மைத்­தி­ரி­பால சிறி­சே­னவும் நானும் இர­க­சிய ஒப்­பந்­த­மொன்­றினை கைச்­சாத்­திட்­டுள்­ள­தாக ஊட­கங்­களில் முன்னாள் அமைச்சர் திஸ்ஸ அத்­த­நா­யக தெரி­வித்­துள்ளார்.

திஸ்ஸ அத்­த­நா­யக தெரி­விப்­பதைப் போல் எனக்கும் மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விற்கும் இடையில் எந்­த­வொரு இர­க­சிய உடன்­ப­டிக்­கையும் இல்லை. இர­க­சி­ய­மாக உடன்­ப­டிக்கை செய்து கொள்­ளவும் இல்லை.

அர­சாங்கம் எம் மீது பொய்­யான குற்­றச்­சாட்­டுக்­களை தெரி­வித்து அவர்­களின் தோல்­வி­யினை தடுத்து நிறுத்தும் முயற்­சி­யொன்­றி­னையே மேற்­கொண்­டுள்­ளனர்.அதேபோல் அமைச்சர் திஸ்ஸ அத்­த­நா­யக வெளிப்­ப­டுத்­திய உடன்­ப­டிக்­கையில் இருப்­பது எனது கையொப்­ப­மில்லை.

பொய்­யான கையொப்­ப­மொன்­றினை தயா­ரித்து என் மீது குற்றம் சுமத்­து­கின்றார். எனவே இதற்கு எதி­ராக நான் சட்ட நட­வ­டிக்கை மேற்­கொள்­ள­வுள்ளேன்.தற்­போது இவ் அர­சாங்­கத்தின் எம் மீதான பொய்­யான குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்பில் பொலிஸ் மா அதி­ப­ருக்கு கடி­த­மொன்­றினை அனுப்பி வைத்­துள்ளேன்.

எனது கையொப்­ப­மென பொய்­யான கையொப்­ப­மொன்­றினை தயா­ரித்து எம் மீது குற்றம் சுமத்­தி­யுள்­ள­மைக்கு திஸ்ஸ அத்­த­நா­யக மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.அதோடு இதில் குறிப்பிடப்பட்டுள்ள எனது கையொப்பம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு என் மீதுள்ள குற்றச்சாட்டுக்களை நிரூபிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.