Breaking News

கூட்டமைப்பு மைத்திரிக்கு ஆதரவு (முழுமையான காணொளி)

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமது கட்சி பொது வேட்பாளர் மைத்திரிபால
சிறிசேனவுக்கு ஆதரவளிக்க உள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர் சம்பந்தன் இதனை அறிவித்துள்ளார்.


தமிழ் மக்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.இதன்போது தலைவர் ஆர்.சம்பந்தனுடன், கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, செல்வம் அடைக்கலநாதன், எம்.ஏ.சுமந்திரன் மற்றும் சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் பங்கேற்றிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது. கூட்டம் தொடர்ந்தும் நடைபெறுகிறது.