மஹிந்தவின் ஆட்சியை மக்கள் முடிவுக்குக் கொண்டு வருவார்கள் - பொன்சேகா - THAMILKINGDOM மஹிந்தவின் ஆட்சியை மக்கள் முடிவுக்குக் கொண்டு வருவார்கள் - பொன்சேகா - THAMILKINGDOM
 • Latest News

  மஹிந்தவின் ஆட்சியை மக்கள் முடிவுக்குக் கொண்டு வருவார்கள் - பொன்சேகா

  ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பதவிப் பேராசையை மக்கள் முடிவுக்கு கொண்டு வருவார்கள் என ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.


  மைத்திரிபால சிறிசேனவின் வெற்றியை உறுதி செய்யும் நோக்கில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.குரோத அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க மக்கள் ஏற்கனவே அணி திரண்டு விட்டனர்.ராஜபக்ச ஆட்சியாளர்கள் நிராயுதபாணிகள் மீது ஆயுதங்களைக் கொண்டு தாக்குகின்றனர்.

  இவ்வாறான ஓர் அணுகுமுறையை பின்பற்றியிருந்தால் 24 மணித்தியாலத்தில் ஆட்சியை கைப்பற்றியிருக்க முடியும்.  எனினும் நான் அவ்வாறான தவறான காரியங்களில் ஈடுபடவில்லை.நாட்டில் காணப்படும் ஊழல் மோசடிகளை இல்லாதொழிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.இணையத்தில் பாலியல் தொடர்பில் தேடலில் ஈடுபடும் நாடுகளின் வரிசையில் இலங்கை தொடர்ந்து முதனிலை வகிக்கின்றது.

  இவ்வாறான ஓர் நிலைமைக்கு நாடு தள்ளப்பட்டுள்ளது. எதனோல் பவுசர்களிலும், சீமேந்து மூட்டைகளைப் போன்று போதைப் பொருட்களும் நாட்டுக்குள் கொண்டு வரப்படுகின்றன.நாட்டின் ஒழுக்க விழுமியங்கள் சீர்குலைக்கப்பட்டுள்ளது.நாட்டில் ஒழுக்க விழுமியங்களை ஏற்படுத்த மீண்டும் நாட்டை ஒப்படைக்குமாறு கோருகின்றார்.

  சாராய போத்தல் ஒன்றை கண்டால் சாரத்தை தூக்கிக் கொண்டு வீட்டாரை தூசனத்தில் திட்டும் நபரே அவர், அவரைப் பற்றி எனக்கு நன்றாகத் தெரியும்.அவ்வாறான நபருக்கு எவ்வாறு இந்த நாட்டை ஒப்படைப்பது.

  ரகர் விளையாடும் மகன்மார் இருக்கின்றார்கள், போட்டியில் தோற்றால் நடுவரைத் தாக்குவார்கள்.வீட்டாரின் ஒழுக்கத்தை கட்டிக் காக்க முடியாதவர் எவ்வாறு நாட்டின் ஒழுக்கத்தை பேணப் போகின்றார் என சரத் பொன்சேகா அண்மையில் நடைபெற்ற தேர்தல் பிச்சாரக் கூட்டமொன்றில் கேள்வி எழுப்பியுள்ளார்.
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: மஹிந்தவின் ஆட்சியை மக்கள் முடிவுக்குக் கொண்டு வருவார்கள் - பொன்சேகா Rating: 5 Reviewed By: Unknown
  Scroll to Top