Breaking News

திஸ்ஸவுக்கு எதிராக வழக்கு - மைத்திரி

அமைச்சர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எதிராக வழக்குத் தொடரப் போவதாக பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.


தானும் ரணில் விக்கிரமசிங்கவும் செய்துகொண்ட ஒப்பந்தம் தொடர்பில் நேற்று ஆற்றிய உரைக்கு எதிராகவே வழக்குத் தொடரவுள்ளதாக குறிப்பிட்டார்.கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக மாநாட்டிலேயே இவ்வாறு மைத்திரிபால தெரிவித்தார். 

திஸ்ஸ அரசின் தாளத்துக்கு ஆடுவதாகவும், தானும் ரணிலும் எப்போதும் திஸ்ஸ குறிப்பிட்டது போன்று நாட்டையும் இராணுவத்தையும் காட்டிக் கொடுக்கும் ஒப்பந்தமொன்றைச் செய்யவில்லை.மட்டுமன்றி, திஸ்ஸ சமர்ப்பித்த ஆவணங்கள் போலியானவை என்றும், அதில் போடபட்டிருக்கும் தனதும், ரணில் விக்கிரமசிங்கவினதும் கையெழுத்துக்கள் போலியானவை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.