மீண்டும் சினிமாவாகிறது பாலச்சந்திரன் படுகொலை
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலையை மையமாக வைத்து வீரத்தின் மகன் என்ற பெயரில் மற்றுமொரு படம் தயாரிக்கப்படுகிறது.
இறுதிப்போரில் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டதை மையமாக வைத்து ஏற்கனவே புலிப்பார்வை என்ற படம் வெளிவந்திருந்தது. இந்த நிலையில் தற்போது பி.ஜி;ரவீந்திரனின் இயக்கத்தில் வீரத்தின் மகன் என்று ஒரு படம் வெளிவரவுள்ளது. இந்தப்படத்தில் அத்வைது என்ற சிறுவன் பாலச்சந்திரனாக நடிக்கிறான். படப்பிடிப்பு நிறைவுபெற்றுக்கொண்டிருக்கும் நிலையில் ஜனவரியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.