Breaking News

கிணற்றில் இருந்து சிறுவனின் சடலம் மீட்பு

யாழ். நுணாவில் பகுதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் இருந்து எட்டு வயது சிறுவன் ஒருவனின் சடலம் மீ்ட்கப்பட்டுள்ளது. நுணாவில் மத்தியை சேர்ந்த இராஜகோபால் ஆகாஷ் (வயது 8) எனும் சிறுவனே இன்று இவ்வாறு சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். 


சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

பெற்றோர்கள் வீட்டில் சிறுவனை தனியே விட்டு விட்டு நேற்று சனிக்கிழமை கூலி வேலைக்கு சென்றுள்ளனர். அவர்கள் வேலை முடிந்து வீடு வந்த போது சிறுவனை வீட்டில் காணவில்லை. பல இடங்களில் நேற்று தேடியும் சிறுவன் கிடைக்கவில்லை இந்நிலையில் இன்று காலை கிணற்றடிக்கு பெற்றோர் சென்று இருந்த போது சிறுவன் சடலமாக கிணற்றுக்குள் மிதந்ததை பார்த்துள்ளனர். 

அதனை அடுத்து சிறுவனின் சடலம் மீட்கப்பட்டு சாவகச்சேரி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை சாவகச்சேரி பொலிசார் முன்னெடுத்து வருகின்றனர்.