Breaking News

நாளை இரவு 10 மணிக்கு தபால்மூல வாக்களிப்பு முடிவுகள்

இலங்கையின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெறும் வேட்பாளர் எதிர்வரும் 9ஆம் திகதி மாலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுவார் என தேர்தல் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். 


மேலும் எதிர்வரும் 8 ஆம் திகதி இரவு 10 மணியளவில் முதலாவது தபால் மூலவாக்களிப்பு முடிவுகள் அறிவிக்க முடியும் என தாம் எதிர்பார்ப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார். இதேவேளை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சி சார்பாக 17 வேட்பாளர்களும், இரண்டு சுயாதீன வேட்பாளர்களுமாக மொத்தம் 19 பேர் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.