Breaking News

மகிந்தவின் டம்மி மைத்திரி தேர்தலில் 3ஆம் இடம்

மைத்திரிபால சிறிசேனவைநேருக்குநேர் மோதமுடியாத
மகிந்த போட்ட நாடகங்களில் ஒன்றுதான் போலி மைத்திரி போன்ற ஒரு நபரை இறக்கியது. அவர்தான் நடைபெற்றுமுடிந்த ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கிய ஜனாதிபதி வேட்பாளர்களில் மகிந்த ராஜபக்சேவுக்கு அடுத்தபடியாக 3ஆவது இடத்திலிருப்பவர் இந்த போலி சிறிசேனதான்.

அந்த வகையிலும் மகிந்தவால் 18000 வாக்காளர்வரை ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள் என்பது தேர்தல் முடிவுகளில் தெரியவருகிறது. 

வடக்கில்கூட மகிந்தவால் இந்த நாடகத்தில் ஒருபகுதிதான் மைத்திரிபாலவின் அன்ன சின்னம் இல்லாத போலி வாக்குசீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டிருந்தமையும் அறிந்ததே.

போலி சிறிசேனாவுடன் மகிந்த ராஜபக்ச வாக்களிக்க செல்லுகிறார். அதுவும் பாருங்கள் எப்படி மைத்திரிபோல உடுத்தியிருக்கிறார் என்று. குடாநாட்டில் ஒரேநாளில் அனைத்து பத்திரிகைகளின் முகப்பு பக்கத்தில் இடம்பிடித்த போலியின் பின்னனி இப்போது விளங்குகின்றதா? ஆளுக்கு கொஞ்சம் பவுடர் பூசினா அசல் மைத்திரிதான்.