இலங்கை - நியுசிலாந்து 4 வது ஒருநாள் போட்டி இன்று
இலங்கை மற்றும் நியுசிலாந்து அணிகளுக்கு இடையிலான 4 வது சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஒருநாள் போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
குறித்த போட்டி நியுசிலாந்து நெல்சனில் உள்ள SAXTONOVAL மைதானத்தில் நாளை அதிகாலை நடைபெறவுள்ளது.நேற்று முன்தினம் இடம்பெற்ற 3 வது சர்வதேச ஒருநாள் போட்டி கால நிலை சீர்கேடு காரணமாக ரத்துச் செய்யப்பட்டது.
இந்த நிலையில், முதலாவது போட்டியில் நியுசிலாந்து அணி இலங்கை அணியை 3 விக்கட்டுகளால் தோற்கடித்தது. இரண்டாவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 6 விக்கட்டுகளால் நியுசிலாந்து அணியை வெற்றிகொண்டது. இதனடிப்படையில், இரண்டு அணிகளும் சமநிலையில் உள்ளன.








