Breaking News

ஜனாதிபதி பதவியேற்பு செலவு 6000

இலங்கையின் ஏழாவது ஜனாதிபதி தேர்தல் வெற்றி பெற்ற மைத்திரிபால சிறிசேன, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியாக நேற்று பதவியேற்றுக் கொண்டார்.


கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று மாலை பதவியேற்று நிகழ்வு நடைபெற்றது.இந்த நிகழ்வுக்காக  6,000 ரூபாய் மட்டுமே செலவு செய்யப்பட்டதாக அதன் ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

புதிய ஜனாதிபதியை வரவேற்பதற்காக பூக்கொத்து வாங்குவதற்கு சிறுதொகையும் சுதந்திர சதுக்கத்துக்கான மின்சார கட்டணமும் செலுத்தப்பட்டதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.எனினும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஒரு நிகழ்வில் பங்குபற்றுவதாக இருந்தால் கூட, அது ஆடம்பரமானதும் மிகவும் செலவு கூடிய நிகழ்வாக இருக்கும் என அவதானிகள் சுட்டிக்காட்டிக்காட்டியுள்ளனர்.

இந்நிலையில் புதிய ஜனாதிபதியின் பதவியேற்று நிகழ்வும் மிகவும் எளிமையாக நடைபெற்றமையானது, இலங்கையில் நல்லாட்சி ஏற்படக்கூடிய எதுநிலைகளை காட்டி நிற்பதாக தெரிவிக்கப்படுகிறது.