பஸ் கட்டணம் 7% குறைப்பு
எரிபொருள் விலை குறைக்கப்பட்டமைக்கு அமைய பஸ் கட்டணத்தை நூற்றுக்கு 7-8% குறைக்க முடியும் என இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதன்படி குறைந்தளவு கட்டணமாக 9 ரூபா 8 ரூபாவாக குறைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
பஸ் கட்டண விலை குறைப்பு நடவடிக்கையை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு எதிர்வரும் நாட்களில் முன்னெடுக்கும் என கெமுனு விஜேரத்ன தெரிவித்தார். தனியார் பஸ் துறையை பாதுகாப்பதில் தற்போது பாரிய சவால் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
புதிய எரிபொருள் விலை குறைப்பு அடிப்படையில் சாதாரண டீசல் 16 ரூபாவால் விலை குறைக்கப்பட்டு லீட்டர் 95 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.








