Breaking News

8ம் திகதி நள்ளிரவு நாடாளுமன்றத்தைக் கலைக்க திட்டம்

ஜனவரி 8ஆம் திகதி நள்ளிரவில் நாடாளுமன்றத்தைக் கலைத்து விடுவதற்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி முடிவுசெய்துள்ளது என்று தெரியவருகிறது. 


நடைபெறவுள்ள தேர்தலில் தமக்கு தோல்வி ஏற்பட்டால் சுதந்திரக் கட்சியை சந்திரிகா கைப்பற்றிவிடுவார் என்று கட்சி வட்டாரங்களுக்குள் எழுந்த சந்தேகத்தை அடுத்து தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னர் நாடாளுமன்றத்தை கலைத்துவிட கட்சியின் உயர் பீடத்தினர் ஆலோசித்து வருகின்றனர் என்று தெரியவருகிறது.