Breaking News

சம்பந்தன் வாக்களிக்கவில்லை

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வாக்களிக்கவில்லை.  


 ஜனாதிபதி தேர்தல் நேற்று நடைபெற்றது. இந்தநிலையில் த.தே.கூ தலைவர் இரா. சம்பந்தன்  திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்தவர். வாக்களிக்கும் உரிமையும் திருகோணமலை மாவட்டத்திலேயே உள்ளது.    எனினும் அவர் தனது வாக்குரிமையினை செலுத்தச் செல்லாது கொழும்பிலேயே இருந்துள்ளார்.  

அவர் வாக்களிக்கச் செல்லாதமைக்கு சுகவீனம் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.   இதேவேளை, த.தே.கூ செயலாளர் மாவை சேனாதிராசா யாழ்ப்பாணத்தில் தனது வாக்கினை செலுத்தியிருந்ததுடன் ஏனைய உறுப்பினர்களும் தங்களது வாக்குகளை தமது பிரதேசங்களில் பதிவு செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.