விரைவில் இடைக்கால வரவு செலவுத் திட்டம்
எதிர்வரும் 29ம் திகதி இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்று முன்வைக்கப்பட உள்ளது.
மக்களுக்கு விரைவில் நிவாரணங்களை வழங்கும் நோக்கில் இவ்வாறு இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்றை புதிய அரசாங்கம் சமர்ப்பிக்க உள்ளது.ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நூறு நாள் வேலைத் திட்டத்தில் இந்த இடைக்கால வரவு செலவுத்திட்ட சமர்ப்பிப்பு யோசனையும் உள்ளடங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவினால் கடந்த ஒக்ரோபர் மாதம் வரவு செலவுத் திட்ட யோசனையொன்று சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.இந்த யோசனைக்கு மேலதிகமாக இடைக்கால வரவு செலவுத் திட்டமொன்று முன்வைக்கப்பட உள்ளது.
இந்த வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக அத்தியாவசியப் பொருட்களுக்கான நேரடி மற்றும் மறைமுக வரிகள் ரத்து செய்யப்பட உள்ளதுடன், சம்பள உயர்வும் வழங்கப்பட உள்ளதாக 100 நாள் யோசனைத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.








