தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்படும்- ரணில்
சிறுபான்மை தமிழ் பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் முக்கிய கவனம் செலுத்தப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஜனவரியில் இடம்பெற்ற தேர்தல் மாற்றத்திற்கான, நல்லிணக்கத்திற்கான தேர்தல். வடக்கில் தமிழர்கள் அதிகம் வாழும் பகுதிகளுக்கு மட்டுமின்றி, சிங்கள மக்கள் பெரும்பான்மையாக வாழும் மாகாண சபைகளுக்கும் அதிகாரங்களை கூட்டவுள்ளது.
முன்னைய அரசு சீனா அரசுடன் மேற்கொண்ட ஒப்பந்தங்கள் மற்றும் ட உடன்படிக்கைகள் குறித்து தற்போதைய அமைச்சர்கள் ஆராய்ந்து வருகின்றனர். ஆனாலும் எல்லை அடிப்படையில் சீனாவுடனான உறவுகள் தொடரும். கடந்த அரசின் ஊழல், மோசடிகள் குறித்து விசாரணை நடத்துவதில் பாரிய சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் காணப்பட்ட வரையரைகளை நீக்கவுள்ளதால் நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள் மற்றும் புத்திஜீவிகளை மீண்டும் நாடு திரும்புமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.








