தேர்தலுக்கு தயார் - ஆணையாளர்
எந்த தருணத்திலும் தேர்தல் ஒன்று நடத்தப்படுமாக இருந்தால், அதன்பொருட்டு தேர்தலை கண்காணிக்கும் அமைப்புகளுக்கு அதிக சந்தர்ப்பத்தை வழங்குவதற்கு எதிர்பார்ப்பதாக தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தேர்தல் வன்முறைகளை கண்காணிக்கும் அமைப்புகள் கொழும்பில் நேற்று ஒழுங்கு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆணையாளர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அடுத்த தேர்தலில் வாக்களிப்பின் போது தேர்தல் கண்காணிப்பாளர்களுக்கு இதைவிட மேலதிக வாய்ப்புகளை வழங்க முடியும், 100 நாட்கள் அல்ல 10 நாட்களிலும் தேர்தல் நடத்த எம்மால் முடியும். இன்று தேர்தல் வைக்கவேண்டும் என்று கோரினாலும் எம்மால் தேர்தல் ஒன்றுக்கு சொல்ல முடியும் என்றும் தேர்தல்கள் ஆணையாளர் குறிப்பிட்டார்.








