மீண்டும் தலைவராக முத்துவேல் கருணாநிதி
பழம் பெரும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக முத்துவேல் கருணாநிதி 12 வது முறையாக தெரிவாகியுள்ளார்.
92 வயதை நிறைவு செய்துள்ள முத்துவேல் கருணாநிதியின் புதல்வர் எம்.கே.ஸ்டாலின் இரண்டாவது முறையாக பொருளாராக தெரிவாகியுள்ளதுடன் கட்சியின் 3 வது உயர்மட்ட பிரமுகராகவும், திகழ்கிறார்.
கருணாநிதியின் புதல்வியான கனிமொழி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மகளீர் பிரிவின் செயலாளராகவும் தெரிவாகியுள்ளார்.கடந்த 2013 ஆம் ஆண்டு ஸ்டாலினை தமது அரசியல் வாரிசாக உத்தியோகபூர்வமாக கருணாநிதி பிரகடனப் படுத்தியிருந்தார்.
ஸ்டாலினுக்கு மூத்த சகோதரரான அழகிரிக்கு அந்த பதவியை வழங்காமையால் அவர் கட்சியிலிருந்து வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.