Breaking News

அற்புதன்,நிமலராஜன்,மகேஸ்வரி கொலையாளி ஈபிடிபி தான்(காணொளி)

தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன், ஊடகவியலாளர் நிமலராஜன்,ஈ.பி.டி.பி சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம்,இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா உட்பட யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல கொலைகளை செய்தது ஈ.பி.டி.பி கட்சியே! இவ்வாறு பகிரங்க வாக்மூலம் கொடுத்திருப்பவர் முன்னாள் ஈ.பி.டி.பி கட்சியின் மத்தியகுழு உறுப்பினர் பொன்னயன். 


அவர் கடந்த காலங்களில் ஈ.பி.டி.பி செய்த கொலைகள் தொடர்பாக யாழ் ஊடக மையத்தில் கலந்துகொண்டு கொலைகளை பட்டியலிட்டுள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தினமுரசு பத்திரிகையின் ஆசிரியர் அற்புதன், ஊடகவியலாளர் நிமலராஜன்,ஈ.பி.டி.பி சட்டத்தரணி மகேஸ்வரி வேலாயுதம்,இலங்கை வானொலி அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜா உட்பட யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற பல கொலைகளை செய்தது ஈ.பி.டி.பி கட்சியே என்றும் மேலும் வெள்ளைவான் கடத்தல்,மண்டைதீவு கொலை உட்பட்ட சகல கொலைகளும் யார்யார் சம்பந்தப்பட்டார்கள் என்பதை வெளிப்படுத்த தயாராக இருப்பதாகவும் அறிவித்திருக்கின்றார். 

 காணொளி உதவி ஐ.பி.சி
   

இது தொடர்பாக ஏற்கனவே அவர் ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் வெளிப்படுத்திய வாக்குமூலமும் இணைத்துள்ளோம்.

 




தொடர்புடைய முன்னைய செய்திகள் 






முன்னணி உறுப்பினரை ஈ.பி.டி.பி ஆதரவுடன் வெளியேற்றினார் மணி