புதிய ஜனாதிபதியுடன் இணைந்து செயற்படத் தயார் - பான் கீ மூன்
வெற்றிக்கரமாக முடிவடைந்த தேர்தல் தொடர்பில் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன், தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் சமாதானமாக அதிகாரம் கையளிக்கப்பட்டமையையும் பான் கீ மூன் வரவேற்றுள்ளார்.இந்தநிலையில் இலங்கையில், நியாயமான தேர்தலை முன்னெடுக்க தேர்தல் திணைக்களம் மேற்கொண்ட செயற்பாடுகளையும் மூன் பாராட்டியுள்ளார். நியூயோர்க்கில் நேற்று வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயங்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை தமது நிர்வாகம் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து செயற்பட விருப்பம் கொண்டுள்ளதாகவும் மூன் அறிவித்துள்ளார்.








