Breaking News

ஆனைக்கோட்டைப் பகுதி மக்களின் காணி சுவீகரிப்புக்கு எதிராக போராட்டம் (படம் இணைப்பு)

கூழாவடி ஆனைக்கோட்டை பகுதியில் பொதுமக்கள் பலருக்குச் சொந்தமான காணிகள் ஸ்ரீலங்கா அரசினால் சுவீகரிக்கப்பட்டு இராணுவ முகாம் அமைப்பதற்காக வழங்கப்படவுள்ள செயற்பாட்டைக் கண்டித்து  ஆணைக்கோட்டை கூழாவடி இராணுவ முகாம் முன்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இன்றைய தினம் கவனயீர்ப்புப் போராட்டத்தை நடத்தவுள்ளது.

காணி சுவீகரிப்பு குறித்து சண்டிலிப்பாய் பிரதேச செயலரினால் குறித்த காணி உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட்டிருந்தது. காணி உரிமையாளர்கள் தமது காணிகள் சுவீகரிக்கப்படுவதனை விரும்பாதபோதும் அவர்களது விருப்பத்திற்கு மாறாகவே மேற்படி நிகழ்வு நடைபெறவுள்ளதாக பாதிக்கப்பட்ட மக்கள்  தெரிவித்திருந்தனா். 

மேற்படி காணிகளை இராணுவ முகாம் அமைப்பதற்காக வழங்கும் நடவடிக்கைக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது. இப்போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செ.கஜேந்திரன் மற்றும் உறுப்பினர்கள் ,தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் வடமாகாண உறுப்பினர் அனந்தி ,சுவிகரிக்கப்பட்ட காணி உரிமையாளர்கள் போன்றோரும் கலந்து கொண்டனர்

மேற்படி இன்றைய தினம் இராணுவத்திற்கு வழங்கப்பட இருந்த காணிக்கான நிகழ்வுகள்  உயர் அதிகாரிகளிடம் இருந்து பதில் கிடைக்காததினால்  நடைபெறாது என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்றைய தினம் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது