வடக்கிற்கு சிக்கல் கொடுத்தவர் மைத்திரியால் மலையகத்திற்கு மாற்றம்
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளர் திருமதி விஜயலட்சுமி
ரமேஸ் பெருந்தோட்டக் கைத்தொழில் இராஜாங்க அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று திங்கட்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் இந்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக வடக்குமாகாண சபை முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் முரண்பட்ட இவர், மாகாண சபையின் செயற்பாடுகளுக்கும் தொடர்ந்தும் இடையூறு ஏற்படுத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
வடக்கு மாகாணத்தின் பிரதம செயலாளரான விஜயலட்சுமியை மாற்றம் செய்யும்படி முன்னைய அரசிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பலதடவை கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அரசினதும் அதன் அடிவருடிகளின் கையாளாக செயற்பட்ட இவர் தான்தோன்றித்தனமாக வடமாகாணசபையின் செயற்பாடுகளுக்கு எதிராக செயற்பட்டிருந்தார்.
ஆட்சிமாற்றம் ஏற்பட்ட நிலையில் கூட்டமைப்பால் மைத்திரி தலைமைக்கு பிரச்சனை தெரியப்படுத்தியதையடுத்து உடனடியாகவே அதிரடி மாற்றங்களில் ஒன்றாக ரணில் முன்னிலையில் ஜனாதிபதி மைத்திரியால் மலையகத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.