“சண்டி வீரன்” படத்தின் வெளியிடு உரிமையை வாங்கிய நிறுவனம்
இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ் தயாரித்த “சண்டி வீரன்” படத்தின் வெளியிடு உரிமையை வெற்றிகரமாக கைபற்றிய ஸ்ரீ கீரீன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம்.
இயக்குனர் பாலா இயக்கத்தில் பரதேசி, மற்றும் இயக்குனர் இயக்கத்தில் மிஷ்கின் ஆகிய வெற்றிபடங்களை தயாரித்த இயக்குனர் பாலாவின் பி ஸ்டுடியோஸ், தற்போது சற்குணம் இயக்கத்தில், அதர்வா மற்றும் ஆனந்தி நடிப்பில் “சண்டி வீரன்” என்னும் படத்தை தயாரித்துள்ளது.
சண்டி வீரன் படத்தை தமிழ்நாடு, கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் வெளியிடும் உரிமையை திரு MS சரவணன் அவர்களின் ஸ்ரீ கீரீன் புரோடக்ஷன்ஸ் பெற்றுள்ளது.ஸ்ரீ கீரீன் புரோடக்ஷன்ஸ் நிறுவனம் சலீம், வேலையில்லா பட்டதாரி, வருத்தப்படாத வாலிபர் சங்கம் போன்ற பல வசூல் வேட்டை செய்த படங்களின் வெளியிடும் உரிமையை பெற்று வெற்றிகரமாக வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் சலிம் திரைப்படத்தையும், சிட்டி ஏரியாவில் வேலையில்லா பட்டதாரி மற்றும் கயல் படத்தையும், செங்கல்பட்டு ஏரியாவில் வருத்தப்படாத வாலிபர் சங்கம், பிட்சா 2, வெள்ளைக்காரதுரை, ஒரு ஊர்ல ரெண்டு ராஜா ஆகிய படங்களை வெளியிட்டுள்ளனர்.
இப்படத்தின் இசை வெளியீடு விரைவில் நடைப்பெறவுள்ளது.








