Breaking News

மகிந்தவின் மனைவியும் ‘‘100 கிலோ தங்க‘‘ சிக்கலில்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி சிரந்தி ராஜபக்ச மீது கையூட்டல் மற்றும் ஊழல்கள் தொடர்பாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முன்னாள் உதவி காவல்துறை அதிகாரி வாஸ் குணவர்த்தனவின் மனைவியே இன்றைய தினம் இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். திறைசேரியினால் 500 லட்சம் ரூபா பெறுமதியான 100 கிலோ தங்கம் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் தமது கணவரான வாஸ் குணவர்த்தன விசாரணைகளை மேற்கொண்டார்.


இதன்போது இந்த விற்பனையில் சிராந்தி ராஜபக்ச தொடர்புப்பட்டுள்ளதாக தகவல் வெளியானது. இதன்போது உதவி காவல்துறை அதிபர் அனுர சேனாநாயக்க, விசாரணையை நிறுத்துமாறு உத்தரவிட்டார் அத்துடன் இந்த விடயம் பொய்யானது என்று கூறி ஊடகங்களுக்கு கருத்துரைக்குமாறும் தமது கணவரிடம் கோரப்பட்டது. எனினும் அதனை மேற்கொள்ளாத நிலையிலேயே தமது கணவரும் மகனும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாக வாஸ் குணவர்த்தனவின் மனைவியான சாமலி தெரிவித்துள்ளார்
தொடர்புடைய பி.பி.சி செய்தி