யாழ். வடமராட்சி கிழக்கில் தமிழ்த் தரப்பு - ஈ.பி.டி.பி பலப்பரீட்சை (காணொளி)
மக்கள் போராட்டத்தினால் முடியடிக்கப்பட்டுள்ளது.
மகேஸ்வரி நிதியம் முறையான அனுமதியெதுவும் பெறாமல் மணல் அகழும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி பொதுமக்கள் குற்றஞ்சாட்டினார்கள். சட்டவிரோதமான மணல் அகழ்வினால் தங்களுடைய பிரதேச மண் வளம், மற்றும் நீர் வளம் என்பன பாதிக்கப்பட்டு வருவதாக மக்கள் குற்றஞ்சாட்டினார்கள்.
இதனையடுத்து, மகேஸ்வரி நிதியத்தின் மணல் அகழ்வு நடவடிக்கையை தடுத்து நிறுத்துமாறு கோரி அப்பகுதி மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றை இன்று காலை முன்னெடுத்தனர்.
மக்களுடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன், வடமாகாண சபை உறுப்பினர்கள் சந்திரலிங்கம் சுகிர்தன், பாலச்சந்திரன் கஜதீபன், இமானுவல் ஆர்னோல்ட், எம்.கே.சிவாஜிலிங்கம், மற்றும் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் கே.சஞ்சீவன், வல்வெட்டித்துறை நகர சபை உறுப்பினர் கந்தசாமி சதீஸ் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
பிரதேச செயலருடனான சந்திப்பில்
ஈ.பி.டி.பி மணல் கொள்ளை நிர்வாகியுடனான ஆர்ப்பாட்டக்காரரின் வாய்த்தர்க்கம்
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் மகேஸ்வரி நிதியத்தினருக்கும் இடையில் வாய்த்தர்க்கம் முற்றியது. இதனையடுத்து அவ்விடத்துக்கு பொலிஸார் வருகை தந்து, குழப்பநிலையை தவிர்த்தனர்.
பொலிஸார் கூறுகையில், 'மகேஸ்வரி நிதியம் பெற்றுள்ள அனுமதியானது முறையற்ற விதத்தில் பெறப்பட்டுள்ளதாகக்கூறி பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளனர்.
அத்துடன், தற்போது இங்கு அமைதியின்மை நிலவுவதாக எங்களுக்கு தகவல் கிடைத்து இவ்விடத்துக்கு வருகை தந்தோம். இந்த இடத்தில் தொடர்ந்து மணல் அகழ முடியுமா என்பது தொடர்பிலும் அனுமதி தொடர்பிலும் ஆராயவேண்டியுள்ளது. மருதங்கேணி பிரதேச செயலாளர், யாழ்.மாவட்டச் செயலாளர் சுந்தரம் அருமைநாயகம், ஜனாதிபதி செயலகம் ஆகியவற்றின் கருத்துக்கமைய இங்கு மணல் அகழ்வதற்கு இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்கின்றோம்.
அதனை மீறி யாராவது மணல் அகழ்வில் ஈடுபடமுனைந்தால் அவர்கள் மீது சட்டநடவடிக்கை எடுக்கப்படும். இங்குள்ள பிரதேச மட்ட அமைப்புக்கள், மக்கள் அமைப்புக்கள், மாகாண சபை, நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்துரையாடி இப்பகுதியில் மேற்கொள்ளப்படும் மணல் அகழ்வு தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுப்பார்கள் எனப்பொலிஸார் கூறினார்கள்.
கடந்த 5 ஆண்டுகளாக இடம்பெற்று வந்த மண்கொள்ளைக்கு எதிராக பல தடவைகள் அம்மக்கள் போராட்டங்களை நடாத்தியுள்ளனர்.
அதேபோன்றதொரு போராட்டம் இன்று நாகர்கோவில் பகுதியில் இடம்பெற்றது. அப்போராட்டத்திற்கு தங்கராஜா காண்டீபன் தலைமை தாங்கியருந்தார். மேற்படி போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் கலந்து கொண்டிருந்தனர்.
பொது மக்களது எதிர்ப்பையும் மீறி ஈபிடிபி மண்கொள்ளைக்காரர்கள் மண்ஏற்ற முற்பட்டபோது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் இணைந்து மிகக் கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தினர்.
நிலைமை கட்டுமீறச் செல்வதனை அறிந்த பொலீசார் உடனடியாக இந்த வந்த்திற்கு வந்தனர்.
பொதுமக்கள் ஆத்திரமடைந்துள்ள காரணத்தினாலும் சட்டபூர்வ அனுதியின்றி சட்டத்திற்கு விரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபடுவதனாலும் உடனடியாக மணஒ; அகழ்வை நிறுத்த வேண்டும் என ஈபிடிபி யினருக்கு பொலீசார் உத்தரவிட்டனர்.
ஈபிடிபியினர் மக்களை மிரட்டி தமது மண்கொள்ளைக்கு மக்களாதரவு உள்ளபோன்று காட்ட முற்பட்டனர் எனினும் மக்கள் மசிந்து கொடுக்காத நிலையில் டிப்பர்களில் ஏற்றப்பட்டிருந்த மண்ணை மீண்டும் அவ்விடத்திலேயே கொட்டிவிட்டு வெளியேறினர்.
எனினும் இந்த ஈபிடிபி அமைப்பினர் தம்மை வாகனங்களால் மோதிக் கொலை செய்துவிடுவார்களோ என்ற அச்சத்துடனேயே தாம் செல்வதாக மக்கள் கூறிச் சென்றதை கேட்க முடிந்தது.
.jpg)











