கஹவத்த துப்பாக்கி சூடு! படுகாயமடைந்த மைத்திரி ஆதரவாளர் சாவு
எதிரணி பொது வேட்பாளர் மைத்திரிபால சிறிசேனவின் தேர்தல் பரப்புரைக்கு மேடை அமைத்துக் கொண்டிருந்த போது கடந்த 5 ஆம் திகதி துப்பாக்கிச் சூடு இடம்பெற்றது. குறித்த சம்பவம் தொடர்பில் பிரதி அமைச்சர் பிரேமலால் ஜயசேகரவை கைது செய்யுமாறு பெல்மடுல்ல நீதவான் பிடியாணை உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.








