Breaking News

காணாமல் போனவர்களை புதிய அரசே தேடித்தா எனக் கோரி ஆர்ப்பாட்டம் (படம்ங்கள் இணைப்பு)


கடந்த காலத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் காணாமல்போன உறவுகளை கண்டறிவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கவேண்டும் என்பதை வலியுறுத்தி மட்டக்களப்பில் கவன ஈர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாவட்ட காணாமல்போனோர் சங்கமும் மட்டக்களப்பு மாவட்ட காந்தி சேவா சங்கமும் இணைந்து இந்த போராட்டத்தினை மட்டக்களப்பு நகரின் காந்தி பூங்காவில் நடாத்தியது.மகாத்மா காந்தியின் 67வது நினைவு தினத்தினை தொடர்ந்து இந்த கவன ஈர்ப்பு போராட்ட முன்னெடுக்கப்பட்டது.

இந்த கவன ஈர்ப்பு போராட்டத்தில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,பா.அரியநேத்திரன் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான.

இரா.துரைரெட்னம்,ஞா.கிருஸ்ணபிள்ளை,மா.நடராஜா,பிரசன்னாஇந்திரகுமார் உட்பட காணாமல்போனவர்களின் உறவினர்கள் கலந்துகொண்டனர்.

கடந்த காலத்தில் நடாத்தப்பட்ட காணாமல்போனவர்களை கண்டறியும் ஆணைக்குழுவில் தங்களுக்கு நம்பிக்கையில்லையெனவும் காணாமல்போனவர்கள் தொடர்பில் புதிய ஜனாதிபதி துரித நடவடிக்கையெடுக்கவேண்டும் எனவும் இங்கு காணாமல்போனவர்களின் உறவினர்களினால் வலியுறுத்தப்பட்டது.

இது தொடர்பில் புதிய அரசாங்கத்தினை வலியுறுத்தும் மகஜரை புதிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களிடம் வழங்கப்பட்டது.எனது பிள்ளையை கண்டுபிடித்துத் தரவும்', 'அரசே இதற்கு சரியான நடவடிக்கை எடு' உள்ளிட்டவை எழுதப்பட்ட சுலோக அட்டைகளை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தாங்கியிருந்தனர்.


மட்டக்களப்பு மாவட்டத்தில் 1983ஆம் ஆண்டு தொடக்கம் 2009ஆம் ஆண்டு வரையில் சுமார் 14ஆயிரம் பேர் காணாமல்போயுள்ளமை குறிப்பிடத்தக்கது.