நெஞ்சில் பட்ட பந்து! பரிதாபமாக உயிரிழந்த பாகிஸ்தான் வீரர்
பாகிஸ்தானைச் சேர்ந்த கிரிக்கெட் வீரரொருவர் பந்து நெஞ்சில்பட்டதால் உயிரிழந்த சோகமான சம்பவமொன்று கராச்சியில் இடம்பெற்றுள்ளது.
கராச்சியில் ஓரங்கி நகரில் இடம்பெற்றுள்ள மேற்படி சம்பவத்தில் 18 வயதான ஷீசன் மொஹமட் என்ற இளைஞரே உயிரிழந்துள்ளார்.பந்து நெஞ்சில்பட்டவுடனேயே அவரை வைத்தியசாலைக்கு கொண்டுசென்ற போதிலும் அவர் முன்னரே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு அவுஸ்திரேலிய அணி வீர்ர் பிலிப்ஸ் ஹூக்ஸ் பந்து தலையில் பட்டதால் ஏற்பட்ட காயம் காரணமாக உயிரிழந்த சம்பவம் கிரிக்கெட் உலகையே சோகத்தில் ஆழ்த்தியமை குறிப்பிடத்தக்கது.








