போட் சிட்டி ரகசியங்களை வெளியிட்டார் சிறிதரன்
தெற்கு சூடானில் உள்ள 70 சதவீதமான எண்ணெய் குழாய்களை 50 வருடத்தில் கொழும்பு வழியாக சீனாவுக்கு கொண்டு செல்லும் நோக்கத்தில் சீனா, கொழும்பு துறைமுகத்தில் துறைமுக நகரம் கட்ட நடவடிக்கை எடுக்கின்றது.
இது தொடர்பாக தற்போதைய அரசாங்கத்தை கூடிய அவதானம் செலுத்துமாறு தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் வவுனியா குருமன்காடு கட்சி அலுவலகம் திறக்கும் நிகழ்வில் கலந்துக்கொண்டு தெரிவித்தார்.
துறைமுக நகரம் கட்டுவது என்பது உலகத்தில் உள்ள மிக பலம் வாய்ந்த நாடுகளுக்கும் மாநில நாடுகளுக்குமே ஆபத்தான காரியம் ஆகும். சீனா, இப்பகுதிகளில் தம் அடிகளை ஆழமாக வைத்து பாரிய நிலப்பரப்பை எடுத்துக்கொண்டதோடு கோடி கணக்கான பணத்தை செலவு செய்து துறைமுக நகரத்தை அமைப்பது ஏன்?
அமெரிக்கா மற்றும் இந்தியா போன்ற நாடுகள் இதனை சிறிதும் கண்டுகொள்ளவில்லை ஐரோப்பிய நாடுகள் இது ஒரு நல்ல காரியம் என நினைக்கவும் இல்லை.
அவர்கள் இது குறித்து தொடர்ந்தும் யோசித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஆயுதம் இன்றி இரத்தம் இன்றி இலங்கை ஜனநாயகத்தை தோற்கடிப்பதற்கு நிகழ்ச்சி நிரல் அந்நாட்டுகளில் இருந்தது.இது தொடர்பாக தற்போதைய அரசாங்கம் நிறைய யோசிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.








