Breaking News

தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்க !ஜனாதிபதியிடம் கோரிக்கை

தமிழ் அரசியல் கைதிகளை உடன் விடுதலை செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் யாழ். கத்தோலிக்க மதகுருமார்கள் கூட்டாக இணைந்து கோரிக்கை விடுத்துள்ளனர்.

 யாழ். மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தரநாயகம் ஆண்டகை தலைமையிலான கத்தோலிக்க மதகுமார்கள் ஒன்றிணைந்து இக் கோரிக்கையை அண்மையில் விடுத்துள்ளனர். மேலும் ஆயிரக் கணக்கான தமிழ் அரசியல் கைதிகள் நீண்ட காலமாக சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். 

 அத்துடன் வெள்ளை வான்களில் கடத்தப்பட்டவர்கள் , இறுதிக் கட்ட போரின் போது சரணடைந்தவர்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பில் உரிய விசாரணைகள் நடாத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிய ஆவணத்தை ஜனாதிபதி அனுப்பிவைத்துள்ளனர். இதேவேளை , புதிய ஜனாதிபதி மைத்திரியின் 100 நாள் வேலைத்திட்டத்தில் அரசியல் கைதிகள் தொடர்பிலும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என நம்பப்படுகின்றது.