Breaking News

முத்தையன்கட்டு மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி (புகைப்படங்கள்)

வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு முத்தையன்கட்டு மக்களுக்கான,வடமாகாண சபையின்  வெள்ள நிவாரண உதவிகள் நேற்றைய தினம் வழங்கப்பட்டன. வடமாகாணசபையின் விவசாய அமைச்சினால் வழங்கப்பட்ட உணவுப்பொருட்களை, முல்லைத்தீவு மாவட்ட மாகாணசபைப் பிரதிநிதிகள் வழங்கி வைத்தார்கள்.


இது குறித்து மேலும் தெரியவருகையில்,

சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின்போது முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் முத்தையன்கட்டு இடதுகரை மக்கள் 125 குடும்பத்தினர் அங்குள்ள பாடசாலையில் தஞ்சமடைந்திருந்தனர். இந்த விபரங்களை பிரதேச செயலாளர் மூலம் பெற்று மாகாணசபைக்கு தெரியப்படுத்தியதன் பேரில் மேற்படி பொருட்கள் கிடைத்தன. 

மாகாணசபையின் விவசாய அமைச்சினால் வழங்கப்பட்ட இந்த உதவிகளை 
மாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெயநாதன் , வடமாகாணசபை உறுப்பினர்கள் துரைராசா ரவிகரன், மேரிகமலா குணசீலன் ஆகியோர் நேரில் சென்று பிரதேச செயலர் குருபரன் அவர்களுடன் வழங்கினார்கள்.நேற்றைய தினம் மாலை 4.30 மணியளவில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் 125 குடும்பங்களுக்கான உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன. 4 பேருக்கு மேற்பட்ட உறுப்பினர்களுடைய குடும்பங்களுக்கு 1700 ரூபாவுக்குரிய உணவுப்பொருட்கள் உள்ள பொதியும் , 3 பேருக்கு உட்பட்ட குடும்பங்களுக்கு 1200 ரூபாவுக்கான உணவுப்போதியும் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.