கிழக்கில் பொதுத் தேர்தல் வரையில் ஆட்சிமாற்றம் இல்லை
ஏற்னவே இந்த நிர்வாகம் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் கீழ் இருந்து வந்தது.எனினும் மத்திய அரசாங்கத்தில் ஏற்பட்ட ஆட்சி மாற்றம், கிழக்கு மாகாண சபையிலும் ஆட்சிமாற்றம் ஏற்படும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.
இதில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கும், சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸ{க்கும் இடையில் இணக்கப்பாடு ஏற்படும் போதே, அங்கு புதிய மாகாண அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான ஏது நிலை காணப்படுகிறது.
எனினும் இந்த இரண்டு கட்சிகளும் இன்னும் விட்டுக் கொடுக்காத போக்கை கடைபிடித்து வருகின்றமையால், கிழக்கு மாகாண சபையின் புதிய ஆட்சி குறித்து ஐயநிலை நிலவி வருகிறது.
இந்த நிலையில் எதிர்வரும் பொதுத் தேர்ததல் இரண்டு கட்சிகளுக்கும் முக்கியமானது என்ற அடிப்படையில், கிழக்கு மாகாண ஆட்சி தொடர்ந்தும் மாற்றத்துக்கு உள்ளாகாமல் இருக்கும் என்றே நம்பப்படுகிறது.








