வடமராட்சியில் வாக்குச்சாவடிக்கு அருகில் கைக்குண்டு தாக்குதல்
பருத்தித்துறை, அல்வாயில் பாடசாலை வாக்குசாவடி அமைந்துள்ள பகுதிக்கு அருகாமையில் உள்ள பாழடைந்த வீட்டின் மீது இனம் தெரியாத நபர்களால் கைகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதனால் இப்பகுதியில் அச்சம் நிலவுவதோடு பெருந்தொகையான பொலிசாரும் குவிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபற்றி தெரியவருவதாவது
யாழ். பருத்தித்துறை நாவலடி ஸ்ரீலங்கா வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையத்துக்கு 800 மீற்றருக்கு அப்பால் கைக்குண்டு வீச்சு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கபே அமைப்பின் நிறைவேற்று பணிப்பாளர் கீர்த்தி தென்னகோன் தெரிவித்தார்.
குறித்த சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் இருந்த மக்கள் பாதுகாப்பான இடத்திற்கு சென்றுள்ளனர்.இதனையடுத்து இந்த வாக்களிப்பு நிலையத்தில் தற்போது பாதுகாப்பான முறையில் வாக்களிப்புக்கள் இடம்பெறுவதாக கபே அமைப்பு தெரிவிக்கின்றது.








