பதவி மற்றும் அதிகாரங்களை விட்டுக்கொடுப்பது சிறந்த குணம் - மைத்திரி
பதவி மற்றும் அதிகாரங்களை தங்கவைத்துக் கொள்வதன் ஊடாக ஒரே இடத்தில் தங்கியிருக்க வேண்டிய நிலை ஏற்படும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று இடம்பெற்ற அமைச்சரவை பதவிப் பிரமாண நிகழ்வின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.பதவிகளை கைவிடுவதற்கும், விட்டுக்கொடுப்பதற்கும் அரசியல் தரப்பினரிடம் விருப்பம் இருக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
நேற்று பதவியேற்றுக்கொண்ட அமைச்சரவைக்கு வழங்கப்படாத துறைகள் தொடர்பாக எதிர்வரும் நாட்களில் தீர்மானம் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.அதேவேளை, குற்றச் செயல், ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் எந்தவொரு தரப்பினருக்கும் எதிராக தராதரம் பாராது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.








