பொலிஸார் அதிரடி சோதனை - இ.தொ.கா அங்கத்தவா்கள் பணிபகிஷ்கரிப்பு
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உறுப்பினர்களின் வீடுகளில் சந்தேகத்தின் பேரில் பொருட்கள் பதுக்கி வைத்திருப்பதாக வெளியாகிய தகவலின் அடிப்படையில் பொலிஸார் அவர்களின் வீடுகளுக்கு சென்று அதிரடி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதனடிப்படையில் கொத்மலை பிரதேசத்தில் இருக்கின்ற மத்திய மாகாண சபை உறப்பினரும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவருமாகிய ரமேஷின் வீடுக்கு நேற்று(18) பொலிஸார் சென்று அவரின் வீட்டை எந்த விதமான அறிவித்தலுமின்றி சோதனைகளை மேற்கொண்டுள்ளனர்.
இது நாகரிகமற்ற செயல் என கூறி மலையகத்தில் குறிப்பாக ஹட்டன், நோர்வூட், பொகவந்தலாவ, மஸ்கெலியா, நோட்டன் பிரிட்ஜ், தலவாக்கலை போன்ற இடங்களில் இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கட்சி அங்கத்தவர்கள் வீதியில் இறங்கி பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுப்பட்டனர்.