நாடு திரும்பும் இந்திய மீனவர்கள்
நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் 15பேரும் நாளை மறுதினம் தமது சொந்த நாட்டிற்கு அனுப்பி வைக்கப்படவுள்ளனர்.
எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட எனும் குற்றச்சாட்டில் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மாவட்டத்தைச் சேர்ந்த 15 இந்திய மீனவர்களும் நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்கப்பட்டு யாழ்.இந்திய துணைத்தூதரகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்கள் 15 பேரும் தற்போது யாழ்.இந்திய தூதரகத்தால் தனியார் விடுதி ஒன்றில் தங்கவைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.








