Breaking News

குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் - ஜே.வி.பி.

குற்றவாளிகள் சட்டத்தின் அடிப்படையிலேயே தண்டிக்கப்பட வேண்டுமென ஜே.வி.பி. கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க கோரியுள்ளார்.


குரோதம்,  கோபம் அல்லது பழி வாங்கும் எண்ணத்துடன் செயற்படுவதனை அனைவரும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.குற்றச்செயல்கள் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்பட வேண்டும்.தற்போதைய சட்டங்களை மேலும் வலுவானதாக்கி குற்றாவளிகள் நீதியின் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.

அரசியல் அமைப்பிற்கு முரணான வகையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தேர்தலை முன்கூட்டியே நடத்தினார்.ஆட்சி அதிகாரத்தை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளும் நோக்கில் இவ்வாறு மஹிந்த தேர்தலை நடத்தினார்.எனவேதான் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட நாம் கடுமையான தேர்தல் பிரச்சாரமொன்றை முன்னெடுத்தோம்.

தேர்தல்களில் முறைகேடுகளைச் செய்ய அரசாங்கம் மேற்கொண்ட சகல முயற்சிகளையும் நாம் வெற்றிகரமாக முறியடித்தோம்.பெருமளவில் பணம் வாரி இறைக்கப்பட்ட ஜனாதிபதி தேர்தல் இதுவாகும். தொடர்ந்தும் பணத்தைக் கொண்டு தேர்தலில் வெற்றியீட்ட முடியாது என்பது இந்த தேர்தல் முடிவுகள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது.

மூட நம்பிக்கைகளின் அடிப்படையில் அரசாங்கம் தேர்தல் பிரச்சாரத்தை முன்னெடுத்தது.எனினும் நாட்டு மக்கள் இந்த விடயங்களை தெளிவாக புரிந்து கொண்டு சுய சிந்தனையுடன் சிறந்த முறையில் வாக்களித்தனர்.ஊழல் மோசடிகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் அடிப்படையில் தண்டிக்கப்படவேண்டும்.

18ம் திருத்தச் சட்டம் ரத்து செய்யப்பட்டுää சுயாதீன ஆணைக்குழுக்கள் நிறுவப்பட வேண்டுமென அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்ல பெலவத்தையில் அமைந்துள்ள கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் நேற்று இதனைக் குறிப்பிட்டுள்ளார்.