யோசித்த ராஜபக்ஷவிற்கு எதிராக முறைப்பாடு
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகன் யோசித்த ராஜபக்ஷ, இலங்கை கடற்படையில் இணைந்து கொண்ட விதம் குறித்து விசாரணை செய்யுமாறு கோரி இன்று முறைப்பாடு செய்யப்படவுள்ளது.
இங்கிலாந்தின் டாக்மாத் அரச கடற்படை பல்கலைக்கழகத்தில் புலமைப்பரிசிலை பெற்ற அவர் அங்கு பயிற்சிநெறியை நிறைவு செய்யாமலேயே இலங்கை திரும்பிவிட்டதாக மக்கள் விடுதலை முன்னணி தெரிவித்துள்ளது. எனினும் கடற்படையின் பெஜ்டொப் பயிற்சியை எவ்வாறு நிறைவுசெய்தார் என்று விசாரணை செய்யுமாறு கோரியே இந்த முறைப்பாடு செய்யப்படவுள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி அறிவித்துள்ளது.
அத்துடன் அரச பணியில் இருந்த நிலையில் எவ்வாறு தனியார் நிறுவனம் ஒன்றை நடத்திச் செல்ல முடியும் என்றும் விசாரணை செய்யுமாறு மக்கள் விடுதலை முன்னணி பாதுகாப்பு செயலாளரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளது.
ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்கள் வெளிநாடுகளுக்குத் தப்பிச் செல்லாதிருப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் இலங்கையின் பாதுகாப்பு, நிதி மற்றும் இளைஞர் விவகாரம் உள்ளிட்ட முக்கிய அமைச்சுப் பொறுப்புக்களை வைத்திருந்தவர்கள் இரட்டை பிரஜாவுரிமை கொண்டவர்கள் என்பதையும் மக்கள் விடுதலை முன்னணி சுட்டிக்காட்டியுள்ளது.








