முக்கிய வாக்குமூலத்திற்கு தயாராகும் வாஸ் குணவர்தன
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன அடுத்த வழக்கு விசாரணையின் போது வாக்குமூலம் ஒன்றை வழங்க தயாராகி வருவதாக சட்டத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
வாஸ் குணவர்தனவுக்கு எதிராக நடந்து வரும் 16க்கும் மேற்பட்ட கொலை குற்றங்கள் மற்றும் அதற்கு உத்தரவிட்ட நபர்கள் குறித்தும் அவர் வாக்குமூலம் வழங்கவிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த அரசாங்கத்தில் இருந்த முக்கியஸ்தர் ஒருவரின் அழுத்தங்கள் காரணமாவே வாஸ் குணவர்தனவுக்கு பிணை வழங்கப்படாது அவர் தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்கப்பட்டதாக சட்டத்துறை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.








