மேற்கிந்திய தீவுகள் வெற்றி
சுற்றுலா மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் தென்னாபிரிக்க அணிக்கும் இடையிலான நான்காவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி ஒரு விக்கட்டால் வெற்றிப்பெற்றது.
Port Elizabeth இடம்பெற்ற இந்த போட்;டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி முதலில் துடுப்பெடுத்தாடும் சந்தர்ப்பத்தை தென்னாபிரிக்காவுக்கு வழங்கியது.
இதன்படி தென்னாபிரிக்க அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கட்டுக்களை இழந்த நிலையில், 262 ஓட்டங்களை பெற்றது.துடுப்பாட்டத்தில் டேவிட் மில்லர் 130 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.பதிலளித்த மேற்கிந்திய தீவுகள் அணி 48.3 ஓவர்களில் 9 விக்கட்டுக்களை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது.
எவ்வாறாயினும் 5 போட்டிகள் கொண்ட இந்த தொடரை 3க்கு ஒன்று என்ற அடிப்படையில் தென்னாபிரிக்க அணி ஏற்கனவே கைப்பற்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.இந்த நிலையில், தொடரின் இறுதி போட்டி, எதிர்வரும் 28ஆம் திகதி சென்சூரியனில் (Centurion) இடம்பெறவுள்ளது.








