உலக கிண்ணத்தை மீண்டும் இந்தியா தன்வசப்படுத்தும் - பிளட்சர்
நடைபெறவுள்ள உலக கிண்ணத்தை இந்திய அணி கைப்பற்ற அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் டங்கன் பிளட்சர் தெரிவித்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக ஜிம்பாப்வேயை சேர்ந்த டங்கன் பிளட்சர் பணியாற்றுகிறார். இவரது பதவிக்காலம் 2015 கிண்ணத் தொடருடன் முடிவடைகிறது. இந்த நிலையில் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட டங்கன் பிளட்சர், நான் பயிற்சியாளராக பங்கேற்கும் மூன்றாவது உலகக் கிண்ணம் இதுவாகும். இதனால் நான் மிகவும் சந்தோசமாக இருக்கிறேன்.
இதற்கு காரணம் தற்போது எனக்கு கிடைத்துள்ள அணி. இந்தியாவுக்கு உலக கிண்ணத்தை கைப்பற்ற நல்ல வாய்ப்பு இருக்கிறது. கடந்த 4 ஆண்டுகளாக இந்திய அணியின் செயல்பாடு நன்றாக இருக்கிறது. 2013ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற ஐ.சி.சி. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் கிண்ணத்தை வென்றோம்.
இதில் ஒரு போட்டியில் கூட தோற்கவில்லை. அவுஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரில் விளையாடிய பெரும்பாலான வீரர்கள் உலகக் கோப்பையில் விளையாடுகிறார்கள். அவர்கள் இங்குள்ள சூழ்நிலையை நன்கு உணர்ந்து இருக்கிறார்கள். மேலும் டோனியின் அணுகுமுறை மிகவும் உதவும்.








