வாக்காளர்களுக்கு ஒரு அதிர்ச்சித் தகவல்
கொழும்பிலுள்ள அச்சுக் கூடங்களில் பெருந்தொகையான துண்டுப் பிரசுரங்கள் அச்சிட்டுள்ளதாகவும், அப்பிரசுரங்களில், “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலைப் புறக்கணிக்கிறது, வாக்களிக்கச் செல்ல வேண்டாம்” எனக் கூட்டமைப்பு அறிவித்துள்ளதாகவும் அப்பிரசுரங்களை வீடுவீடாகச் சென்று விநியோகிக்கப் போவதாகவும் செய்திகள் கசிந்துள்ளன.
கடந்த முறையும் தமிழ்ப் பத்திரிகையொன்றின் பெயரில் போலிப் பத்திரிகையை மாகாண சபைத் தேர்தல் அன்று வெளியிட்டு வீடுவீடாக விநியோகித்தமையையும் யாழிலிருந்து ஒளிபரப்பாகும் தொலைக்காட்சியொன்று அச் செய்தியைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி தேர்தலைக் குழப்பவும் தமிழ் மக்கள் வாக்களிப்பதைத் தடுக்கவும் எடுத்த முயற்சியை நினைவுபடுத்துகின்றோம்.
எனவே மக்கள் இத்தகைய பொய்ச் செய்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக் கொள்வதோடு அனைத்துத் தமிழ் மக்களும் வாக்களிக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் மாவை.சோ.சேனாதிராசா கோரிக்கை விடுத்துள்ளார்.







