இன்றும் நாளையும் பேரணிகள் ஊர்வலங்கள் நடத்த தடை
இன்றும் நாளையும் பேரணிகள் மற்றும் ஊர்வலங்கள் நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்திற்கான கால அவகாசம் பூர்த்தியாகியுள்ள நிலையில் ஊர்வலங்கள் மற்றும் பேரணிகளை நடத்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய அனைத்து கட்சி செயலாளர்களுக்கும் அறிவித்துள்ளார்.
வேட்பாளர் ஒருவர் அல்லது கட்சியொன்றின் பிரச்சாரத்தை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்படும் உண்ணாவிரதப் போராட்டங்கள், காணாமல் போன அல்லது உயிரிழந்த ஊடகவியலாளர்களை நினைவு கூர்ந்து நடத்தப்படும் நிகழ்வுகள் போன்றவற்றை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
ஒரு வேட்பாளரை போற்றும் வகையிலோ வேட்பாளரை தூற்றும் வகையிலோ ஊடகங்கள் தகவல்களை வெளியிடக் கூடாது. இவ்வாறு செயற்படும் ஊடகங்கள் தேர்தல் முடிவுகளை வெளியிட அனுமதிக்கப்பட மாட்டாது என தேர்தல் ஆணையாளர் எழுத்து மூலம் அறிவித்துள்ளார்.
குறிப்பாக சில அரசாங்க ஊடகங்களுக்கு தேர்தல் ஆணையாளர் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார். இதேவேளை வெளிநாட்டு தேர்தல் கண்காணிப்பாளர்கள் வாக்குச் சாவடிகளை கண்காணிக்கும் பணிகளை இன்று முதல் ஆரம்பிக்க உள்ளனர்.








