Breaking News

பலத்த பாதுகாப்புடன் வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப் பெட்டிகள்

ஜனாதிபதித் தேர்தல் நாளை  இடம்பெறவுள்ள நிலையில், பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் வாக்குப்பெட்டிகள் வாக்களிப்பு நிலையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.   


யாழ்.மத்திய கல்லூரியிலிருந்து வாக்களிப்பு நிலையங்களுக்கு இன்று காலை 9 மணிமுதல் வாக்கு பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டன.   நாளை நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் வாக்களிப்பதற்கு யாழ். மாவட்டத்தில் 4 இலட்சத்து 50 ஆயிரத்து 132 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.    

யாழ். மாவட்டத்தில் 526 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. 36 பிரதான வாக்கு எண்ணும் நிலையங்களும் 8 தபால் மூலமான வாக்குகள் எண்ணும் நிலையங்களும் என மொத்தமாக 44 வாக்கெண்ணும் நிலையங்கள்  செயற்படவுள்ளன.     இதேவேளை தேர்தலில் போது கடமையாற்றுவதற்காக 7000 அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபட்டுள்ளனர். 

இவற்றில் 5000 பொஸிஸ் உத்தியோகத்தர்கள்,2000 அரச உத்தியோகத்தர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.   மேலும் போக்குவரத்துக்கான இலங்கை போக்குவரத்து சபை பேரூந்துகள் 65ந்தும்,தனியார் பேரூந்துகள் 150தும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.