மகிந்தவுக்கு கைதட்ட மக்களை அச்சுறுத்தி அழைத்துச்செல்லும் ஈ.பி.டி.பியினர்
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இன்று யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் நிலையில் ஈ.பி.டி.பி குண்டர்கள் மற்றும் ஈ.பி.டி.பி சார்ந்த சில சமுர்த்தி உத்தியோகத்தர்கள் மக்களை அச்சுறுத்தி யாழ்ப்பாணக் கிராமங்களில் இருந்து பேருந்திகளில் ஏற்றிவருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஊர்காவற்றுறை பிரதேச சபையை சேர்ந்த ஈ.பி.டி.பியினர் மற்றும் சமுர்த்தி உத்தியோத்தர்கள் மகிந்தவின் கூட்டத்திற்கு வராவிட்டால் சமுர்த்தி கொடுப்பனவு 2500 ரூபாவை தரமாட்டோம் என ஏழை மக்களை அச்சுறுத்தி பேருந்துகளில் இன்று ஏற்றி வருகின்றனர்.
நாரந்தனை, தம்பாட்டி, புளியங்கூடல், சுருவில் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்களுக்கே இந்த அச்சுறுத்தலை ஈ.பி.டி.யினர் விடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
இதே வேளை வடமராட்சி கிழக்கு, உடுத்துறை, தாளையடி சமுர்த்தி உத்தியோகத்தர் சுதர்சன் என்பவரும் ஈ.பி.டி.யினருடன் இணைந்து இத்தகைய மக்களை அச்சுறுத்தும் நடவடிக்கையில் தற்பொழுது ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகின்றது.
 

 
 
 
 
 
 











